பாடாங்
பாடாங்
City of Padang Kota Padang ڤادڠ | |
---|---|
![]() மேற்கு சுமாத்திராவில் பாடாங் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 0°57′0″S 100°21′11″E / 0.95000°S 100.35306°E | |
நாடு | ![]() |
பகுதி | சுமாத்திரா |
மாநிலம் | ![]() |
நிறுவப்பட்டது | 7 ஆகத்து 1669 |
பரப்பளவு | |
• மொத்தம் | 694.96 km2 (268.33 sq mi) |
ஏற்றம் | 0−1,853 m (0−6,079 ft) |
மக்கள்தொகை (2023 [1]) | |
• மொத்தம் | 9,42,938 |
• அடர்த்தி | 1,400/km2 (3,500/sq mi) |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
தொலைபேசி | +62 751 |
இணையதளம் | www.padang.go.id |
பாடாங் (ஆங்கிலம்: City of Padang; இந்தோனேசியம்: Kota Padang) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாநிலத்தின் தலைநகரமாகும். சுமாத்திராவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள மிகப் பெரும் நகரமாக இது உள்ளது. இந்தோனேசியாவின் விடுதலைக்கு முன்னர் பாடாங், இடச்சுக் கிழக்கிந்தியாவின் முதன்மை நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[2]
தற்போது சுமாத்திராவில் மேடான், பத்தாம், பலெம்பாங், பெக்கான்பாரு நகரங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது.[3] பாடாங் 695 சதுர கிலோமீட்டர்கள் (268 sq mi) பரப்பளவு கொண்டது.
2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[4] இந்த நகரம் 833,562 மக்கள்தொகையையும்; 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 909,040 மக்களையும் கொண்டிருந்தது;[5]2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 942,938 ஆகும்; இதில் 473,089 ஆண்களும் 469,849 பெண்களும் அடங்குவர்.[1]
பாடாங் அதன் மினாங்கபாவு பண்பாடு, உணவு வகைகள் மற்றும் கடற்கரைகளில் சூரியன் தோன்றும் காட்சிகளுக்குப் பரவலாகப் பெயர் பெற்றது.
வரலாறு
[தொகு]வரலாற்று ரீதியாக, குடியேற்றவிய காலத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே, மிளகு மற்றும் தங்கம் இரண்டிற்கும், பாடாங் நகரம் ஒரு வணிக மையமாக இருந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடச்சுக்காரர்கள் இந்த நகரத்துடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். பாடாங் நகரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினர். இறுதியில பகாருயோங் இராச்சியத்திடமிருந்து (Pagaruyung Kingdom) பாடாங் நகரத்தின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினர்.
இதற்கிடையில் பிரித்தானியர் ஆட்சியின் பல குறுக்கீடுகளும் தோன்றின. இருப்பினும் பாடாங் நகரம், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தோனேசியா விடுதலை அடையும் வரையில் இந்த நகரம் இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.[6] 1906-ஆம் ஆண்டில், பலெம்பாங் நகரத்துடன் சேர்ந்து பாடாங் நகரம், சுமாத்திராவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களாக மாறியது. இரண்டு நகரங்களும் அந்தக் காலத்திலேயே நகர தகுதியைப் பெற்றன.[7]
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (1663–1781)
பிரித்தானியப் பேரரசு (1781–1784)
இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (1784–1795)
பிரித்தானியப் பேரரசு(1795–1819)
இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் (1819–1942)
சப்பானியர் ஆக்கிரமிப்பு (1942–1945)
இந்தோனேசிய குடியரசு (1945–தற்போது)
பகாருயோங் இராச்சியம்
[தொகு]பகாருயோங் அல்லது மலையபுரம் [8] மினாங்கபாவு: Karajaan Pagaruyuang; Pagaruyung Dārul Qarār) என்பது 18-ஆம் நூற்றாண்டில் சுமாத்திரா தீவில் இருந்த ஒரு பேரரசு ஆகும். மேற்கு சுமாத்திராவின் மினாங்கபாவு மன்னர்களின் வசிப்பிடமாகவும்; ஓர் இராச்சியமாகவும் இருந்தது. முந்தைய மலையபுரம் அரசு, தற்போது இந்தோனேசியாவில் பகாருயோங் என்று அழைக்கப்படுகிறது.
தற்போதைய காலத்தில் பகாருயோங் என்பது இந்தோனேசியா, பத்துசங்கார், தானா டாத்தார் பிராந்தியத்தின் தஞ்சோங் இமாஸ் மாவட்டத்தில் ஒரு கிராமமாக உள்ளது.[9]
பகாருயோங் இராச்சியம் நிறுவப்படுவதற்கு முன்பு, பகாருயோங் இராச்சியம், மலையபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) பதிவுகளின்படி சுவர்ணபூமி என்று முன்பு அழைக்கப்பட்ட சுமாத்திரா நிலப்பகுதியில் பகாருயோங் இராச்சியத்தை ஆதித்தியவர்மன் என்பவர் தோற்றுவித்ததாக அறியப்படுகிறது.
பொது
[தொகு]இந்தோனேசியாவின் மிகத் தூய்மையான பெரிய நகரங்களில் ஒன்றாக பாடாங் விளங்குகின்றது. 2017-ஆம் ஆண்டு வரை பெரிய நகரங்களில் மிகத் தூய்மையான, பசுமையான நகரத்திற்கு வழங்கப்படும் ஆதிப்புரா ("Adipura") விருதை 18 முறையும்[10] ஆதிப்புரா கென்கானா ("Adipura Kencana") விருதை 3 முறையும் வென்றுள்ளது.[11]
புவியில் பாடாங்கிற்கு நேர் எதிர் முனையில் எக்குவடோரின் எசுமெரால்டசு உள்ளது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Padang Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.1371)
- ↑ Ashar, Faisal; Amaratunga, Dilanthi; Sridarran, Pournima; Haigh, Richard (2019). "Practices of Tsunami Evacuation Planning in Padang, Indonesia". Coastal Management. Elsevier. pp. 399–433. doi:10.1016/b978-0-12-810473-6.00019-4. ISBN 9780128104736. S2CID 169801987.
Padang is not only the capital city of the Western Sumatra Province of Indonesia, it is also the third-biggest city in that province.
- ↑ http://padangkota.bps.go.id Badan Pusat Statistik Kota Padang பரணிடப்பட்டது 2016-02-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ "Indonesia: Surabaya And Padang". Archived from the original on 4 March 2016.
- ↑ "Badan Pusat Statistik Kota Padang". padangkota.bps.go.id.
- ↑ Casparis 1975.
- ↑ Bosch 1931.
- ↑ "Setelah 8 Tahun, Kota Padang Kembali Raih Piala Adipura". Tempo.co. 2017. https://nasional.tempo.co/read/897556/setelah-8-tahun-kota-padang-kembali-raih-piala-adipura.
- ↑ "9 (Sembilan) Kota Sumatera Barat Meraih Penghargaan Adipura Tahun 2017". West Sumatra Province website. http://www.sumbarprov.go.id/details/gallery/304.
மேலும் காண்க
[தொகு]- 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை
- இந்தோனேசிய நகரங்களின் பட்டியல்
- இந்தோனேசிய நிலப் பகுதிகள்
- இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பாடாங் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அலுவல்முறை வலைத்தளம்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பாடாங்
- சுற்றுலாத் துறை பாடாங் பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம்
- தகவல் பாடாங்
- தகவல் மினாங்