பஞ்ச பாண்டவர் குகைக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்ச பாண்டவர் குகைக்கோயில்
பாண்டவா் குகைக் கோயில், 1860
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மாமல்லபுரம்
புவியியல் ஆள்கூறுகள்12°37′00″N 80°11′30″E / 12.6167°N 80.1917°E / 12.6167; 80.1917
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்

பஞ்ச பாண்டவர் குகைக்கோயில் (Panchapandava Cave Temple) (பஞ்ச பாண்டவர் கோயில்கள் மற்றும் ஐந்து பாண்டவர்களின் மண்டபங்கள் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச் சின்னமாகும். [1] இதுவே மாமல்லபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குகைக்கோயில் ஆகும்.[சான்று தேவை] கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவின் குடைவரைக் கட்டிடக் கலைக்கான உதாரணமாகத் திகழ்கிறது.

இந்தக் கோயிலானது, மாமல்லபுரத்தில் காணப்படும் பல குகைக் குடைவு மண்டபங்களுள், விசுவகர்ம இந்துக் கோயில் கட்டிடக்கலை சிற்பிகளின் குடவரைக் கோயில்கள் கட்டுமானத் திறமைக்கான மிகச்சிறந்த நற்சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மாமல்லபுர மரபுச்சின்னங்களின் பகுதியாக விளங்கும் இந்தக் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின்  உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1984 ஆம் ஆண்டில் தெரிவிற்கான வரைமுறைகள் i, ii, iii மற்றும் iv இன் படி தெரிவு செய்யப்பட்டது. [2]

புவியியல்[தொகு]

பஞ்ச பாண்டவர் மண்டபம் அல்லது பஞ்ச பாண்டவர் குகைக்கோயிலானது, மாமல்லபுரம் நகரில் அர்ச்சுணன் தபசு திறந்த வெளி பாறைச்சிற்பங்களின் அருகில் அமர்ந்துள்ளது. [3] இது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டலக் கடற்கரையில். மாமல்லபுரத்தில் இதர குகைக்கோயில்களுடன் குன்றுகளின் தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் சென்னையிலிருந்து தோராயமாக 58 கிலோமீட்டர் (36 மைல்கள்) தொலைவிலும். செங்கல்பட்டு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் (20 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.[4]

வரலாறு[தொகு]

பஞ்ச பாண்டவர் குகைக்கோயிலின் நுழைவு வாயிலின் பொது முகப்புத் தோற்றம், 1885

பல்லவ கட்டிடக்கலையின் ஒரு பொதுவான பாணியாக சிங்கத்தின் உருவத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள தாழ்வாரத்தின் தூண்கள் அமைந்துள்ளன. இந்தக் குகையின் கட்டிடக்கலை சிறப்பியல்புகளிலிருந்து, இது 7 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நரசிம்மர்வர்மன் I (மாமல்ல காலம்) முதல் நரசிம்மவர்மன் II (ராஜசிம்மா) வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3][5]

தளவமைப்பு[தொகு]

பஞ்ச பாண்டவர் குகைக் கோயிலின் மற்றொரு தோற்றம்

இந்தக் குகைக் கோயிலானது முழுமை பெறாத நிலையில் உள்ளது. நுழைவு வாயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது, 50 அடி அளவில், மாமல்லபுரம் குகைக்கோயில்களிலேயே அதிக நீளமான நிலக்குடைவினைக் கொண்டதாகும். குகையின் தொடக்கத்தின் நீளம் முதன்மை சன்னதிக்குச் செல்ல குகைக்குள் ஒரு சுற்றுவட்டப் பாதை உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது.[3]

கட்டிடக்கலை[தொகு]

நுழைவு வாயிலில் உள்ள இரு தூண்களும், பல்லவர் கால பாறை குடைவு வகை கட்டிடக் கலை பாணியிலான, உட்கார்ந்த நிலையில் உள்ள இரு சிங்கங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ளன. [5] இந்த குகைக் கோயிலின் முகப்புத் தோற்றத்தில், இருபுறத்திலும் பாறையோடு முட்டிக்கொண்டுள்ள இரண்டு செவ்வகத் தூண்களைத் தவிர்த்து, மொத்தம் ஆறு தூண்கள் சிங்கத் தோற்ற அடிப்பகுதியைக் கொண்டுள்ளன. மற்ற குகைகளுடன் ஒப்பிடுகையில், குகைக்குள் செதுக்கப்பட்ட தளவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகளில் பின்வரும் மேம்பாடுகள் காணப்படுகின்றன. முதலாவது, தென்னிந்தியாவின் வழக்கமான அமைப்புள்ள கோயில்களிலிருந்து மாறுபட்ட சுற்றுவட்டப்பாதை, மற்றொன்று முகப்புத் தோற்றத்தை அமைக்கின்ற சிங்க சிலை வடிவத் தூண்கள் வளைவாக அமைக்கப்பட்ட விதம் ஆகியவையாகும். ஒவ்வொரு சிங்க வடிவத் தூண்களும் மூன்று சிங்கங்களைக் கொண்டதாக உள்ளது. ஒன்று முகப்புப் புறத்திலும், மற்ற இரண்டு சிங்கங்களும் பக்கவாட்டிலும், ஒருபுறம் சிங்கமே இல்லாமல் வெறுமையாகவும் காட்சியளிக்கின்றன, [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Group of Monuments at Mahabalipuram". WorldHeritage Convention. பார்க்கப்பட்ட நாள் February 24, 2013.
  2. "UNESCO Site 249 – Group of Monuments at Mahabalipuram" (PDF). UNESCO World Heritage Site. 1983-10-15. பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.
  3. 3.0 3.1 3.2 3.3 "Mahabalipuram – The Workshop of Pallavas – Part II". Pancha-Pandava Mandapa. Puratattva.in. Archived from the original on 21 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Ayyar, P. V. Jagadisa (1982). South Indian Shrines: Illustrated. Asian Educational Services. pp. 157–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0151-2. பார்க்கப்பட்ட நாள் 7 February 2013.
  5. 5.0 5.1 "General view of the entrance to the Pancha Pandava Mandapa, Mahabalipuram". British Library. பார்க்கப்பட்ட நாள் 25 February 2013.