நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்
Appearance
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() Nakula and Sahadeva Ratha | |
வகை | Cultural |
---|---|
ஒப்பளவு | i, ii, iii, iv |
உசாத்துணை | 249 |
UNESCO region | Asia-Pacific |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1984 (8th தொடர்) |
நகுல சகாதேவ இரதம் மாமல்லபுர ரதக் கோயில்களுள் ஒன்றாகும். இது மருத நிலத்துக்கு உரிய கடவுளான இந்திரனுக்காகக் கட்டப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கோயிலில் இதைக் குறிக்கக்கூடிய சிற்பங்களோ வேறு சான்றுகளோ காணப்படாவிட்டாலும், அருகில் காணப்படும் பெரிய யானைச் சிற்பம் இந்திரனுடைய ஐராவதம் எனக் கொண்டே இக்கோயில் இந்திரனுக்கு உரியது என அடையாளம் காண்கின்றனர்.[1]
அமைப்பு
[தொகு]
இதனை யானைக் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலின் விமானத்தை வடமொழியில் "கஜபிருஷ்ட" எனக் கூறுவர். அதாவது யானையின் பின்பகுதி போல அமைந்துள்ளது என்பதால் இப்பெயர். தமிழில் தூங்கானை அமைப்பு அல்லது முக்கால் வட்ட அமைப்பு என்பர்.[2] இது மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக விளங்குகின்றது.
குறிப்புகள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
- தர்மராஜ இரதம், மாமல்லபுரம்
- வீம இரதம், மாமல்லபுரம்
- அருச்சுன இரதம்
- திரௌபதை இரதம், மாமல்லபுரம்
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Mahabalipuram – The Workshop of Pallavas – Part III in Indian History of Archiecture பரணிடப்பட்டது 2013-12-25 at the வந்தவழி இயந்திரம்
- Pancha Rathas, Mamallapuram Arhaeological Survey of India