பச்லியோப்டா பாண்டியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலபார் அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: லெப்பிடாப்பிடிரா
குடும்பம்: பாப்பிலோனிடே
பேரினம்: பச்லியோப்டா
இனம்: P. பாண்டியானா
இருசொற் பெயரீடு
Pachliopta pandiyana[1]
(மூரே, 1881)
வேறு பெயர்கள்

அட்ரோபானியுரா பாண்டியானா

பச்லியோப்டா பாண்டியானா (Pachliopta pandiyana) எனும் பட்டாம்பூச்சி இனம் மலபார் ரோஜா என அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டாம்பூச்சி பச்லியோப்டா பேரினத்தினைச் சார்ந்த அழகிகள் குடும்ப பட்டாம்பூச்சி ஆகும். [2]

தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் பட்டாம்பூச்சியாக இது உள்ளது.

விளக்கம்[தொகு]

இந்த பட்டாம்பூச்சியானது முன்னதாக, இலங்கையில் காணப்படும் இலங்கை இளஞ்சிவப்பு அழகியான பச்லியோப்டா ஜோஃபோன் சிற்றினமாக கருதப்பட்டது.

ரேஸ் பாண்டியானஸ், மூர். " ஏ. ஜோஃபோன் சாம்பல் நிறத்துடன் நெருக்கமாக இனமாக இருந்திருந்தாலும், இந்த இனம் அமைப்பின் அடிப்படையில் வேறுபடுகிறது. முன் இறக்கையின் வெள்ளை நிறம் நுனிப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக நுனிப் பகுதியில், கருப்பு செதில்களால் நிழலாடியது; மைய நரம்புகளுக்கு (நரம்புகள் 4-6) இடையிலான இடைவெளியில் கருப்பு கோடுகள் மிக நீளமாக உள்ளன. வெள்ளை நேர்கோடு அடையாளங்கள் டிஸ்கோசெல்லுலர் நரம்புகள் வரையுள்ளன. பின் இறக்கையின் இறுதி டிஸ்கல் வெள்ளை புள்ளி பெரும்பாலும் மைய துணை நரம்பு வரையுள்ளது (நரம்பு 1), ஆணில் முன்புறம் மிகப் பெரியது, சிறியது அல்லது இரண்டு புள்ளிகளாகப் பிரிக்கப்படுகிறது, பெண்ணில் காணப்படாது . . " . ( ரோத்ஸ்சைல்ட், மேற்கோள் பிங்கம்) [3]

ஒத்த இனங்கள்[தொகு]

இது உரோசா அழகியினை (பச்லியோப்டா அரிஸ்டோலோச்சியா) ஒத்திருக்கிறது. மலபார் ரோசாவின் பின் இறக்கையில் உள்ள மிகப் பெரிய வெள்ளை புள்ளி காரணமாக வேறுபடுகிறது.

சரகம்[தொகு]

தென்னிந்தியா. இந்த பட்டாம்பூச்சி பொதுவான ரோஜாவு போன்று காணப்பட்டாலும் அதனுடன் அதிகம் தொடர்பில்லாதது. இது நீலகிரி மேற்கு சரிவுகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் பிற இடங்களிலும் காணப்படுகிறது.

நிலை[தொகு]

இது பொதுவாகக் காணப்படும் இனமாக இல்லாதிருப்பினும், அச்சுறுத்தலுக்குள்ளான இனமாகக் கருதப்படவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த இனம் பொதுவானதாக உள்ளது.

வகைப்பாட்டியல்[தொகு]

  • இதனுடன் தொடர்புடைய இனமாகக் கருதப்பட்ட கருதப்பட்ட பச்லியோப்டா ஜோஃபோன் இலங்கையில் காணப்படுகிறது
  • தனி கிளையினங்கள் எதுவும் விவரிக்கப்படவில்லை.

வாழ்விடம்[தொகு]

இந்த பட்டாம்பூச்சி தென்னிந்தியா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரமான காடுகளில் 1000 முதல் 3000 அடி உயரம் வரை உள்ளப் பகுதிகளில் காணப்படும்.

பழக்கம்[தொகு]

இந்த பட்டாம்பூச்சியின் பறக்கும்போது உரோசா அழகியினை (பச்லியோப்டா அரிஸ்டோலோச்சியா ) ஒத்திருக்கிறது. அதிகாலை முதல் 10 மணி வரை இது தாழ்வாகப் பறந்து பொதுவாக லந்தனாவின் பூக்களிலிருந்து உணவைப் பெறுகிறது. பின்னர் இவை உயரமாகப் பறக்கிறது; அப்பொழுது இவற்றைப் பிடிப்பது கடினமாக உள்ளது.

வாழ்க்கைச் சுழற்சி[தொகு]

ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன.

உணவு தாவரங்கள்[தொகு]

இவற்றின் இளம் உயிரிகள் தோட்டியா சிலிகோசா (அரிஸ்டோலோச்சியாசி) தாவரங்களை உண்ணுகின்றன. [4]

மேலும் காண்க[தொகு]

  • பாபிலியோனிடே
  • இந்தியாவின் பட்டாம்பூச்சிகளின் பட்டியல்
  • இந்தியாவின் பட்டாம்பூச்சிகளின் பட்டியல் (பாபிலியோனிடே)

குறிப்பிடப்பட்ட மேற்கோள்கள்[தொகு]

  1. Häuser, Christoph L.; de Jong, Rienk; Lamas, Gerardo; Robbins, Robert K.; Smith, Campbell; Vane-Wright, Richard I. (28 July 2005). "Papilionidae – revised GloBIS/GART species checklist (2nd draft)". Staatliches Museum für Naturkunde Stuttgart, Germany. http://www.insects-online.de/frames/papilio.htm. பார்த்த நாள்: 21 June 2013. 
  2. Savela, Markku. "Atrophaneura pandiyana (Moore, 1881)". http://www.nic.funet.fi/pub/sci/bio/life/insecta/lepidoptera/ditrysia/papilionoidea/papilionidae/papilioninae/atrophaneura/#pandiyana. 
  3. One or more of the preceding sentences incorporates text from a work now in the public domain: Walter Rothschild, 2nd Baron Rothschild (1895). Novitates Zoologicae. Vol. II. A revision of the Papilios of the eastern hemisphere, exclusive of Africa. London: Natural History Museum at Tring. பக். 234. https://www.biodiversitylibrary.org/item/24182#page/258/mode/1up. 
  4. Ravikanthachari Nitin; V.C. Balakrishnan; Paresh V. Churi; S. Kalesh; Satya Prakash; Krushnamegh Kunte (2018-04-10). "Larval host plants of the buterfies of the Western Ghats, India". Journal of Threatened Taxa 10 (4): 11502. doi:10.11609/jott.3104.10.4.11495-11550. http://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/3104/4402. 

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]