பக்கனி நரசிம்முலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கனி நரசிம்முலு
2022 இல்பக்கனி நரசிம்முலு
தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டாவது தலைவர்
தெலங்காணா பகுதி
பதவியில்
19 ஜூலை 2021 – 10 நவம்பர் 2022
தேசியத் தலைவர்நா. சந்திரபாபு நாயுடு
முன்னையவர்எல். ரமணா
பின்னவர்கசானி ஞானேசுவர் முதிராஜ்
சட்டப் பேரவை உறுப்பினர்
ஆந்திரப் பிரதேசம் (1956–2014)
பதவியில்
1994–1999
முதலமைச்சர்என். டி. ராமராவ்
நா. சந்திரபாபு நாயுடு
முன்னையவர்பி. சங்கர் ராவ்
பின்னவர்பி. சங்கர் ராவ்
தொகுதிசாத் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வேலைஅரசியல்வாதி

பக்கனி நரசிம்முலு (Bakkani Narasimhulu) தெலங்காணாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2021 முதல் 2022 வரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலங்காணா பிரிவின் தலைவராகவும், மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தலைவராகவும் இருந்தார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பக்கனி நரசிம்முலு, 1983 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் ஒரு சாதாரண அரசியல் ஆர்வலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். மகபூப்நகர் மாவட்டத்தில் கட்சியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 1994 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சாத்நகர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் பி. சங்கர் ராவை எதிர்த்து வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார். [2]

1999 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் கூட்டணியாக இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டது. [3] பின்னர் 2004 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப் பேரவைத் தேர்தலில் இதே சாத்நகர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, பி. சங்கர ராவிடம் தோல்வியடைந்தார். [4] [5]

பின்னர், பக்கனி நரசிம்மு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாகர்கர்னூல் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [6]

ஜூலை 2021 அன்று தெலங்காணா தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராக நரசிம்முலு நியமிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jul 20, Sribala Vadlapatla / TNN / Updated. "Telangana: Ex-MLA Bakkani Narasimhulu is new TTDP chief | Hyderabad News - Times of India" (in ஆங்கிலம்).
  2. "Shadnagar Assembly Constituency Details". Archived from the original on 3 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
  3. "A triumph of alliance arithmetic" (in ஆங்கிலம்). 5 November 1999.
  4. "Naidu likely to appoint Bakkani Narasimhulu as next TTDP chief!". 17 July 2021.
  5. "IndiaVotes AC: Shadnagar 2004".
  6. "Lok Sabha election results 2014: Andhra Pradesh" (in ஆங்கிலம்). 17 May 2014.
  7. "Bakkani Narasimhulu appointed president of Telangana TDP" (in ஆங்கிலம்). 19 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கனி_நரசிம்முலு&oldid=3822827" இலிருந்து மீள்விக்கப்பட்டது