பி. சங்கர் ராவ்
பி. சங்கர் ராவ் | |
---|---|
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் | |
தொகுதி | சிக்கந்தராபாத்-கன்டோன்மென்ட் (2009-14); சாத்நகர் (1983-1989-1999-2004), முன்னாள் அமைச்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஐதராபாத்து |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | விசுவசாந்தி |
உறவுகள் | G. Venkatswamy
G. Vivekananda (Brother in Law) Gaddam Vinod (Brother in Law) |
வாழிடம் | ஐதராபாத்து |
தொழில் | அரசியல்வாதி |
டாக்டர் . பி. சங்கர் ராவ் (P. Shankar Rao) தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் மூத்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல்
[தொகு]சங்கர் ராவ், முதன்முதலில் 1983 இல் சாத்நகர் தொகுதியின் சட்டமன்ற உறுபினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை (1989, 1999, 2004) அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] கோட்லா விஜய பாஸ்கர ரெட்டியின் அமைச்சரவையில் நீர்ப்பாசன அமைச்சராகப் பணியாற்றினார்.
தெலங்காணா இயக்கத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தார். [2]
சர்ச்சைகள்
[தொகு]வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வைத்திருப்பதக தற்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஐதராபாத்தில் உள்ள கனோஜிகுடாவில் உள்ள கிரீன் பீல்ட் என்ற பகுதியில் நில அபகரிப்பு செய்துள்ளதாக நில உரிமையாளர்கள் சங்கம் அளித்த புகாரின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தெலங்காணா உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shadnagar Assembly Constituency Details". Archived from the original on 3 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
- ↑ "Statement on T after May 31: Shankar Rao". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2011-05-08/hyderabad/29522277_1_telangana-p-shankar-rao-upa-government.