நெல்லை கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெல்லைக் கண்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெல்லை கண்ணன்
பிறப்புநெல்லை கண்ணன்
(1945-01-27)சனவரி 27, 1945
திருநெல்வேலி, தமிழ்நாடு
இறப்புஆகத்து 18, 2022(2022-08-18) (அகவை 77)
திருநெல்வேலி, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்தமிழ்க்கடல்
பணிபேச்சாளர்
பட்டிமன்ற நடுவர்
பெற்றோர்ந.சு.சுப்பையா பிள்ளை, முத்து இலக்குமி

நெல்லை கண்ணன் (27 சனவரி 1945 – 18 ஆகத்து 2022) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார்.[2] இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை கண்ணன் நெ.மாலதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவரான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளரும் ஆவார். இளையவரான ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளர்.

கல்வி[தொகு]

நெல்லை கண்ணன் பல்கலைக்கழக புதுமுக வகுப்பு (Pre University Course) வரை பயின்றவர். அதில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் தம் தந்தையிடம் தமிழ் பயின்றார்.[3]

அரசியல்[தொகு]

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து பணியாற்றினார்.[2]

1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலப் பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அப்பொழுது அங்கு தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டவர் மு.கருணாநிதி [4]

நூல்கள்[தொகு]

நெல்லைக் கண்ணன் பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்:[2]

  1. குறுக்குத்துறை ரகசியங்கள் - 1 (கட்டுரை)
  2. குறுக்குத்துறை ரகசியங்கள் - 2 (கட்டுரை)
  3. வடிவுடை காந்திமதியே (கவிதை)
  4. காதல்செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் (கவிதை)
  5. திக்கனைத்தும் சடைவீசி (கவிதை)
  6. பழம்பாடல் புதுப்பாட்டு (கவிதை)

வெளிநாட்டுப் பயணம்[தொகு]

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, குவைத், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.[2]

கைது நடவடிக்கை[தொகு]

2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில், (திருநெல்வேலி) நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இழிவாகப் பேசி, இசுலாமியர்களிடம் வன்மத்தை தூண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினர் 2020 சனவரி 1 அன்று இரவில் நெல்லை கண்ணனை பெரம்பலூரில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை சனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.[5][6]

விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

நெல்லை கண்ணன் 2022 ஆகஸ்ட் 18 அன்று உடல்நலக்குறைவால் தனது 77வது அகவையில் காலமானார்.[7]

நாட்டுடமை[தொகு]

நெல்லை கண்ணனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்., செய்திச் சோலை, ஆகத்து 18, 2022
  2. 2.0 2.1 2.2 2.3 தினமணி (மதுரை) 2022 08 19 பக்.5
  3. The Hindu 2022 08 22,Page 6
  4. The Hindu, 2022 08 22, page 6
  5. நாவினால் போற்றப்பட்டவர் நாவினால் சிறை சென்றார்
  6. நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்
  7. "நெல்லை கண்ணன் மரணம்: இலக்கியம், அரசியல் உலகில் 50 வருட பயணம்". BBC News தமிழ். 2022-08-18. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  8. "8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை". Dinamalar. 2022-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லை_கண்ணன்&oldid=3623138" இலிருந்து மீள்விக்கப்பட்டது