நூதன் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூதன்
பிறப்பு(1945-12-12)12 திசம்பர் 1945
கைக்கலூரு, கிருஷ்ணா மாவட்டம்
இறப்பு30 மார்ச்சு 2011(2011-03-30) (அகவை 65)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
மற்ற பெயர்கள்தடிநாடா வரபிரசாத்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1973–2009
விருதுகள்சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது
என். டி. ஆர் தேசிய விருது

தடினாடா வரபிரசாத் (Tadinada Varaprasad) (12 டிசம்பர் 1945 - 30 மார்ச் 2011 [1] நூதன் பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட ஒரு தெலுங்குத் திரையுலகில் நடித்த நடிகராவார். 1970களின் முற்பகுதியில் தனது திரைப்பட நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இரண்டு மாநில நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார் .[2]

தொழில்[தொகு]

நூதன் பிரசாத் தனது நடிப்பு வாழ்க்கையை குண்டூரில் நா வோட்டு என்ற நாடகத்துடன் தொடங்கினார்.

1973 ஆம் ஆண்டில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடித்த அந்தாலா ராமுடு திரைப்படத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நீடலேனி ஆடதி படத்தில் நடித்தாலும், இவரது முத்தியால முக்கு என்ற படமே பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது இராவ் கோபால் ராவ் என்பவருடன் இணைந்து ஒரு எதிர் நாயகனாக நடித்திருந்தார்.

இவர் சாத்தானாக நடித்த இராஜாதி ராஜு திரைப்படத்துடன் அவரது நடிப்பு வாழ்க்கை உச்சத்தை எட்டியது. இவரது நடிப்பும், "கொத்த தேவுடண்டி பாபு கொத்த தேவுடண்டி" பாடல் காரணமாக இந்த படம் மிகவும் பிரபலமானது. இது இன்றும் பிரபலமாக உள்ளது. இவர், தனது அனைத்து தலைமுறை நாயகர்களுடன் நடித்திருந்தாலும், குறிப்பாக இரண்டாம் தலைமுறை நாயகர்களிடையே பிரபலமாக இருந்தார். பட்ணம் ஒச்சின பதிவிரதாலு, கைதி (கிராம முன்சிப்), மகாமஹராஜு, ஸ்ரீவாரிக்கி பிரேமலேகா, கதாநாயக்குடு, ஆஹா நா பெல்லாண்டா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இவரது வெற்றியைத் தொடர்ந்தன.

1989 ஆம் ஆண்டில், பாமா மாட்ட பங்காரு பாட்ட படத்தின் படப்பிடிப்பில், இவருக்கு விபத்து ஏற்பட்டு முதுகு உடைந்தது. இதனால் முடங்கிப் போன இவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பின்னர் இவர் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். ஒரு காலத்தில் இவர் கௌரவர வேடங்களில் தோன்றினார். தொலைக்காட்சித் தொடர்களுக்கும், திரைப்படங்களுக்கும் குரல்வழி மற்றும் வர்ணனையையும் செய்தார். ஆயனக்கி இத்தரு (1995) படத்தில் மறைந்த கும்மடி வெங்கடேசுவர ராவுக்கு இவர் குரல் அளித்திருந்தார். பின்னர், ஈடிவி -2 நேரலு கோரலு என்ற நிகழ்ச்சியில் தெலுங்கு தொலைக்காட்சி பார்வையாளர்களால் இவர் மிகவும் பாராட்டப்பட்டார்.

இறப்பு[தொகு]

ஐதராபாத்தில் 30 மார்ச் 2011 அன்று தனது 65 வயதில் நீண்டகால நோயால் இறந்தார். இவருக்கு நூதன் குமார் என்ற ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

விருதுகள்[தொகு]

  • 1984 ஆம் ஆண்டில், சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றார்.[3]
  • 2005 இல் என்.டி.ஆர் தேசிய விருது .[4] 1992 ஆம் ஆண்டில் வசுந்தரா திரைப்படத்திற்கும் இதே விருதைப் பெற்றார்.
  • சிறந்த எதிர் நாயகனுக்கான நந்தி விருது - 1986, நவபாரதம் படத்திற்காக
  • சிறந்த எதிர் நாயகனுக்கான நந்தி விருது - 1987, பிரஜா சௌமியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sify Movies website (30 March 2011)". Archived from the original on 20 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. IMDb profile
  3. Andhra Pradesh Year Book -1985, Data News Features, Andhra Pradesh Public Service Commission, 1985
  4. "Nutan Prasad gets NTR award" பரணிடப்பட்டது 2006-06-26 at the வந்தவழி இயந்திரம் தி இந்து

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூதன்_பிரசாத்&oldid=3711186" இலிருந்து மீள்விக்கப்பட்டது