கும்மடி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கும்மடி
படிமம்:Gummadi-Venkateswara-Rao-pic.jpg
பிறப்புகும்மடி வெங்கடேசுவர ராவ்
சூலை 9, 1927(1927-07-09)
இரவிக்கம்பாடு, கோல்லூர் மண்டலம், சென்னை மாகாணம், (தற்போது ஆந்திரப் பிரதேசம்), பிரித்தானிய இந்தியா
இறப்பு26 சனவரி 2010(2010-01-26) (அகவை 82)
ஐதராபாத்து
பணிகுணச்சித்திர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1950–2010
விருதுகள்பத்மசிறீ
குடியரசுத் தலைவர் விருந்து
வலைத்தளம்
gummadi.com

கும்மடி வெங்கடேசுவர ராவ் (Gummadi Venkateswara Rao) (9 சூலை 1928 - 26 சனவரி 2010) ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார், தெலுங்குத் திரையுலகிலும், ஒரு சில தமிழ்ப் படங்களிலும் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். மிகச்சிறந்த முறை நடிகர்களில் ஒருவராக அறியப்பட்ட இவர், சுமார் ஐநூறு திரைப்படங்களில் நடித்திருந்தார். தோடு தொங்கலு (1954), மகாமந்திரி திம்மராசு (1962) ஆகிய படங்களில் இவர் நடித்ததற்காக விமர்சன அங்கீகாரத்தைப் பெற்றார். இதற்காக இவர் குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றுள்ளார். 1978 , 1982ஆம் ஆண்டுகளில் தாஷ்கந்து திரைப்பட விழாவிற்கு தென்னிந்தியாவிலிருந்து இந்திய தூதுக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இருந்தார். [1]

கும்மடி 28, 33 மற்றும் 39 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு மூன்று முறை நடுவர் உறுப்பினராக பணியாற்றினார். [2] [3] [4] மாநில நந்தி விருதுக் குழுவில் இரண்டு முறை பணியாற்றினார். [5] 1977ஆம் ஆண்டில், இந்தியத் திரையுலகிற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது. [6] [7] மாயா பஜார் (1957), மா இன்ட்டி மகாலட்சுமி (1959), குல தெய்வம் (1960), குல கோத்ராலு (1962), ஜோதி (1976), நெலவங்கா (1981), மரோ மலுப்பு (1982), ஏகலைவா (1982), ஈ சரித்ரா யே சிராதோ? (1982), கஜ்ஜு பொம்மலு (1983), பெல்லி புஸ்தகம் (1991) போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜகத்குரு சிறீ காசி நயன சரித்திரம் என்ற படத்தில் நடித்ததே இவரது கடைசி படம். [8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் சென்னை மாகாணத்தில் (இப்போது ஆந்திரப் பிரதேசம்) பிறந்த இவர், கொல்லூர் மண்டலத்திலுள்ள இரவிக்கம்பாடு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது ஒரு நேர்காணலில், தான் கொல்லூரில் உள்ள இசட்பி உயர்நிலைப் பள்ளியிலும், குண்டூரின் இந்துக் கல்லூரியில் படித்த்தாகக் கூறினார் .

ஆரம்ப கால வாழ்க்கையில்[தொகு]

கும்மடியின் நடிப்பு வாழ்க்கை 1950 முதல் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் நீடித்தது. மேலும் இவர் திரைத்துறையில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் பணியாற்றினார். இளமையாக இருந்தபோதிலும், இவர் ஆரம்பத்தில் கண்ணியமான வயதான வேடத்திலேயே நடித்து வந்தர். இவர் சமூக, அரசியல், புராணத் திரைப்படங்களில் பல்துறை குணசித்திர நடிகராகவும் இருந்தார். கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்தார். பழைய தெலுங்குப் படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு தந்தை வேடத்தில் நடித்தார்.

இவர், முதன்முதலில் ஒரு நடிகராக 1942இல் நாடகங்களில் தோன்றினார். அங்கு இவர் மேடையில் ஒரு வயதான மனிதராக நடித்தார். அதிர்ஷ்ட்டதீப்புடு (1950) என்ற படத்துடன் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் நாயகன், எதிர் நாயகன், குணசித்திர வேடங்களில் நடிக்க ஆர்ம்பித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்குத் திருமணமாகி ஐந்து மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர். சனவரி 26, 2010 அன்று ஐதராபாத்தின் கேர் மருத்துவமனையில் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக இவர் இறந்தார். [9] 1957இல் வெளிவந்த மாயா பஜார் என்ற படம் வண்ணமயமாக்கப்பட்டு மீண்டும் திரையிட்டபோது இவர் பொது மேடையில் கடைசியாகத் தோன்றினார். [10]

விருதுகள்[தொகு]

  • 1977இல் இந்திய அரசு பத்மசிறீ வழங்கியது
  • மகாமந்திரி திம்மராசு (1963) படத்திற்காக சிறந்த நடிப்பிற்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது
  • தெலுங்குத் திரையுலகில் பங்களித்ததற்காக இரகுபதி வெங்கையா விருது
  • சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது - மரோ மலுப்பு (1982)

பிற மரியாதை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gummadi Venkateswara Rao
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்மடி_(நடிகர்)&oldid=3104996" இருந்து மீள்விக்கப்பட்டது