உள்ளடக்கத்துக்குச் செல்

நுரை குத சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுரை குத சின்னான்
மலேசிய ஜீகூர் காட்டில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைக்னோனோடசு
இனம்:
P. simplex
இருசொற் பெயரீடு
Pycnonotus simplex
Lesson, 1839

நுரை குத சின்னான் (Cream-vented bulbul)(பைக்னோனோடசு சிம்ப்ளக்சு) என்பது பாசாரின் பறவைகளின் கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது மலாய் தீபகற்பம் முதல் போர்னியோ வரை தென்கிழகாசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிவிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இதன் மார்பகம் சில நேரங்களில் மஞ்சள் நிறமாகத் தோன்றலாம்.

வகைப்பாட்டியல்

[தொகு]
படம் கியூலெமன்சு, 1881

நுரை குத சின்னானின் மாற்றுப் பெயர்களாக வெள்ளைக் கண் பழுப்பு சின்னான் மற்றும் வெள்ளைக் கண் சின்னான் ஆகியவை.

துணையினங்கள்

[தொகு]

நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • பை. சி. சிம்ப்ளக்சு - லெசன், 1839 : மலாய் தீபகற்பத்திலிருந்து சுமத்ரா மற்றும் அருகிலுள்ள தீவுகள் வரை
  • பை. சி. பெர்பிளக்சசு - சாசென் & குளோசு, 1929 : போர்னியோ மற்றும் அருகிலுள்ள தீவுகளில் காணப்படுகிறது.
  • பை. சி. பிரில்விட்சி- ஆர்டெர்ட், 1902 : முதலில் ஒரு தனி சிற்றினமாக விவரிக்கப்பட்டது. சாவகம் தீவில் காணப்படுகிறது
  • பை. சி. காலிசோனசு - ஓபர்ஹோல்சர், 1917 : அனம்பாஸ் மற்றும் வடக்கு நதுனா தீவுகளில் காணப்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2019). "Pycnonotus simplex". IUCN Red List of Threatened Species 2019: e.T155218901A155219616. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T155218901A155219616.en. https://www.iucnredlist.org/species/155218901/155219616. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Bulbuls « IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரை_குத_சின்னான்&oldid=3850086" இலிருந்து மீள்விக்கப்பட்டது