உள்ளடக்கத்துக்குச் செல்

நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம்
Institute of Microbial Technology
Established1984
இயக்குநர்முனைவர் சஞ்சீவு கோஸ்லா
Locationபகுதி 39A, சண்டிகார், இந்தியா, சண்டிகார், இந்தியா
Addresswww.imtech.res.in

நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம் (IMTECH) (Institute of Microbial Technology) இந்தியாவின், சண்டிகரில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) நிதியுதவியில் 1984இல் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

நவீன உயிரியல் அறிவியல் மற்றும் நுண்ணுயிரி சம்பந்தப்பட்ட உயிரி தொழில்நுட்பத்தின் பல துறைகளில் இந்த நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நோயெதிர்ப்பு மற்றும் தொற்று நோய்கள், புரத வடிவமைப்பு மற்றும் பொறியியல், நொதித்தல் அறிவியல், நுண்ணுயிர் உடலியல் போன்ற ஆராய்ச்சிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. மரபியல், ஈஸ்ட் உயிரியல், உயிர் தகவலியல், நுண்ணுயிர் அமைப்பு முறைப்படுத்தல்களின், நுண்ணுயிர் பன்முகத்தன்மையில் உயிராற்றல் பொருட்கள் மற்றும் நொதிகள் உயிர் மாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் முனைவர் சஞ்சீவ் கோஸ்லா ஆவார். மேனாள் இயக்குநர்ககளாக முனைவர் அனில் கோல், மற்றும் முனைவர் கிரிஷ் சாஹ்னி உள்ளனர்.

வசதிகள்

[தொகு]

நவீன உயிரியல் ஆராய்ச்சிக்கான வசதிகளுடன் இந்த நிறுவனம் உள்ளது. இவற்றில் ஆய்வகத்திலிருந்து சோதனை அளவிலான நொதித்தல், திசு மற்றும் உயிரணு வளர்ப்பு வசதி, நுண்ணுயிரிகளைப் பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் அடையாளம் காணும் வசதி, ஆய்வக விலங்கு வளர்ப்பிடம், உயிரி தகவல்தொடர்பு மற்றும் உயிர் கணக்கீட்டிற்கான நிலையங்கள், புரதம் மற்றும் டி.என்.ஏ பகுப்பாய்விற்கான உபகரணங்கள், அறிவுசார் சொத்து மேலாண்மைக்கான சுமார் 64,000 மேற்கோள் புத்தகங்கள், அதி நவீன நுண்ணோக்கிகள் மற்றும் தரவுத்தளங்களைக் கொண்ட நூலகம் செயல்பாட்டில் உள்ளன. நோய்க்கிருமி நுண்ணுயிரிகளின் ஆராய்ச்சி பணிகளுக்காக இந்த நிறுவனம் உயிரியல் பாதுகாப்பு நிலை 3 (பி.எஸ்.எல் 3) ஆய்வக வசதியைக் கொண்டுள்ளது.

சாதனைகள்

[தொகு]

இயற்கை, மறுசீரமைப்பு மற்றும் உறைவு குறிப்பிட்ட ஸ்ட்ரெப்டோகினேஸ் ஒரு முக்கியமான உயிர் காக்கும் மருந்தாகக் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.[1]

கல்வியாளர்கள்

[தொகு]

இந்த நிறுவனம் காசியாபாத் (ACSIR), அறிவியல் மற்றும் புதுமையான ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்து கூட்டாக முனைவர் பட்ட ஆய்வினை வழங்குகிறது.[சான்று தேவை]

மருந்து கண்டுபிடிப்பிற்கான கணக்கீட்டு வளங்கள்

[தொகு]

சிஆர்டிடி (மருந்து கண்டுபிடிப்பிற்கான கணக்கீட்டு வளம்) என்பது திறந்த மூல மருந்து கண்டுபிடிப்பு (ஓ.எஸ்.டி.டி) இன்சிலிக்கோ தொகுதியின் ஒரு பகுதியாகும். சிஆர்டிடி வலை வாசல் மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான கணினி வளங்களை வழங்குகிறது. சி.எஸ்.ஐ.ஆர்-நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் கஜேந்திர பால் சிங் ராகவாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த தொகுதி உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.[சான்று தேவை]

போலி தரவுகளின் சர்ச்சை

[தொகு]

17 ஜூலை 2014 அன்று, இந்தியாவின் பிரதான ஊடகங்கள் பல்வேறு பத்திரிகைகளில் இந்நிறுவன ஆய்வு வெளியிடு ஆவணங்களைத் திரும்பப் பெறுவது குறித்த அறிக்கைகளை வெளியிட்டன.

உயிர் தகவல்தொடர்பு சேவைகள்

[தொகு]

சண்டிகரின் நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள், தரவுத்தளங்கள் மற்றும் வலை சேவையகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சேவையகங்கள் உலகளவில் அறிவியல் சமூகத்தால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Know-how for the production of clot-specific streptokinase". Imtech. 2018-01-30. Archived from the original on 2018-01-30. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.

வெளி இணைப்புகள்

[தொகு]