நீலமேனி ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலமேனி ஈபிடிப்பான்
குளிர்காலத்தில் நீலமேனி ஈபிடிப்பான், ஆண், மாகானோன், ரெய்கான், மகாராட்டிரம், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பறவை
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
யூ. தலசினசு
இருசொற் பெயரீடு
யூமியாசு தலசினசு
சுவைன்சன், 1838
வேறு பெயர்கள்

சுடோபாரோலா மெலனாப்சு
யூமியாசு தலாசினா

நீலமேனி ஈபிடிப்பான் (Verditer flycatcher)(யூமியாசு தலசினசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் ஆகும். இது இமயமலையிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக சுமாத்திரா வரை காணப்படுகிறது.[2] தாமிர-சல்பேட் நீலத்தின் தனித்துவமான நிறம் காரணமாக இந்த சிற்றினம் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. இதன் கண்களுக்கு இடையில் மற்றும் அலகு தளத்திற்கு மேலே ஒரு இருண்ட இணைப்பு உள்ளது. முதிர்ச்சியடைந்த ஆண்களின் உடலின் கருப்பு கண் இணைப்பு மற்றும் சாம்பல் எச்சவாய் தவிர அனைத்துப் பகுதியும் அடர் நீல நிறத்தில் இருக்கும். பெண் மற்றும் முதிரக்கூடிய நிலையில் உள்ள பெண் பறவைகள் வெளிர் நீல நிறத்தில் காணப்படும்.

நீலமேனி ஈப்பிடிப்பான் இரை தேடும் போது, மின்சார கம்பிகள் அல்லது மரத்தின் மேல் கிளைகளில் அமர்ந்திருப்பதும், பறக்கும் பறவைகள் மத்தியில் காண்பதும் சுவாரசியமானது.

இந்த சிற்றினமானது முன்னர் முயுசிகேபா பேரினத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இது நில்தேவ ஈபிடிப்பானுடன் நெருங்கிய உறவு உடையதாக அறியப்பட்டது.[3]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Eumyias thalassinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709426A94209129. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709426A94209129.en. https://www.iucnredlist.org/species/22709426/94209129. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Chats, Old World flycatchers « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  3. Lei Xin, Lian Zhen-Min, Lei Fu-Min, Yin Zuo-Hua, Zhao Hong-Feng (2007).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமேனி_ஈப்பிடிப்பான்&oldid=3476958" இலிருந்து மீள்விக்கப்பட்டது