உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகிரி சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகிரி சிரிப்பான்
Calls
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. cachinnans
இருசொற் பெயரீடு
Montecincla cachinnans
(ஜெர்டான், 1839)
வேறு பெயர்கள்

Garrulax cachinnans
Strophocincla cachinnans
Crateropus cachinnans protonym

நீலகிரி சிரிப்பான் (Nilgiri laughingthrush) உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு சிற்றினம் ஆகும் .இவை மிக உயரத்தில் காணப்படும், தீபகற்ப இந்தியா முழுதும் காணப்படும்.

பெயர்கள்

[தொகு]

தமிழில்  :நீலகிரி சிரிப்பான்

ஆங்கிலப்பெயர்  :Nilgiri Laughingthrush

அறிவியல் பெயர் : மான்டிசின்க்லா கேச்சின்னாசு [2]

உடலமைப்பு

[தொகு]

20 செ.மீ. - தலையும் உச்சியும் சிலேட் பழுப்பு நிறம். உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பு, கண்கள் வழியே வெண்பட்டைக்கோடு செல்லும். மோவாய் கருஞ்சிவப்பு,தொண்டையும் மார்பும் நல்ல கருஞ்சிவப்பு, வாலடி வெளிர் கருஞ்சிவப்பு.

காணப்படும் பகுதிகள்

[தொகு]
நீலகிரி சிரிப்பானின் வாழிடம் -நீலகிரி

நீலகிரியிலும் அதைச் சார்ந்த சோலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணலாம். பத்துப் பன்னிரண்டு பறவைகள் குழுவாகப் புதர்கள் அடியே பழுத்து உதிர்ந்த இலைகளைப் புரட்டிப் புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி ஆகிய நகரங்களைச் சார்ந்தும் இதனைக் காணலாம்.

உணவு

[தொகு]

வயநாட்டு சிரிப்பானை போல மனிதர்களைக் கண்டு அஞ்சி ஒளிவதில்லை. பிற பறவைக் குழுக்களோடு சேர்ந்து இரை தேடுவதும் உண்டு. க்கீ-க்கீ-க்கீ என ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகக் கத்தத் தொடங்கிப் பின் குழு முழுதும் சிரிப்பது போலக் கலகலப்பான குரல் ஒலி எழுப்பும்.

இனப்பெருக்கம்

[தொகு]

பிப்ரவரி முதல் சூன் வரை பழுத்த இலை, வேர் மரப்பாசி ஆகியன கொண்டு கோப்பை வடிவிலான கூட்டினைக் கட்டி 3 முட்டைகள் வரை இடும்.[3]

நீலகிரி சிரிப்பான்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Strophocincla cachinnans". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2010. பார்க்கப்பட்ட நாள் 21 May 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Nilgiri_laughingthrush நீலகிரி சிரிப்பான்". பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:125
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_சிரிப்பான்&oldid=3756916" இலிருந்து மீள்விக்கப்பட்டது