நீலகண்ட தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலகண்ட தாசு
ஒடிசா மாநில சட்டசபையில் நீலகாந்த தாசின் உருவப்படம்
ஒடிசா மாநில சட்டசபையில் நீலகாந்த தாசின் உருவப்படம்.
Speaker: 2nd ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1957 மே 27 – 1961 சூலை 1
முன்னவர் நந்த கிசோர் தாசு
பின்வந்தவர் இலிங்கராஜூ பாணிகிரகி
தொகுதி சத்யாபதி சட்டமன்றத் தொகுதி
முதல் மற்றும் இரண்டாவது ஒடிசா சட்டமன்றத்தின் உறுப்பினர்.
பதவியில்
1952–1961
தொகுதி சதயாபதி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 5, 1884(1884-08-05)
பூரி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு 6 நவம்பர் 1967(1967-11-06) (அகவை 83)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
சார்புகள்
சுவாதின் சனசங்கம்
கல்வி முதுதத்துவமாணி
படித்த கல்வி நிறுவனங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
தொழில் எழுத்தாளர், அரசியல்வாதி

நீலகாந்த தாசு ( Nilakantha Das) (பிறப்பு: 1884 ஆகஸ்ட் 5 - இறப்பு:1967 நவம்பர் 6) [1] பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், பூரி மாவட்டத்தின் சிறீ இராம்சந்திரபூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் ஓர் சொற்பொழிவாளரும், அரசியல்வாதியும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார். இவர் பிரித்தானிய இராச்சியத்தில் ஒரு இலாபகரமான பணியை மறுத்தார். சத்தியாபதி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [2] இவரது உரைகளின் மூலம் தீண்டாமை மற்றும் பிற சமூக தீமைகளுக்கு எதிராக போராட இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தினார்.  

1951 ஆம் ஆண்டில், தாசு ஒடிசா சட்டமன்றத்தில் சுவாதின் சனசங்கம் என்ற புதிய அரசியல் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 1955 ஆம் ஆண்டில், ஜவகர்லால் நேருவின் வேண்டுகோளின் பேரில் அவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1957 இல் மீண்டும் அந்த கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தாசு 1960 இல் பத்ம பூசண் விருது பெற்றார். [4] இவர் 1967 நவம்பர் 6 அன்று இறந்தார். [5]

குறிப்புகள்[தொகு]

  1. "Pandit Nilakantha & Formation of Orissa Province".
  2. "Eminent Personalities of Orissa". Government of Orissa.
  3. "Odisha Files: Pundit Nilakantha Das" (2012). "1951: Elected to Orissa Legislative Assembly with his new named party 'Swadhin Jana Sangha ';"
  4. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India) (21 May 2014).
  5. "The Makers of Modern Orissa". "Death laid its icy finger on him on 6th November 1967"
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_தாசு&oldid=3025302" இருந்து மீள்விக்கப்பட்டது