நீமியன் சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெராக்கிள்ஸ் நீமியன் சிங்கத்தை கொல்வது. இது லாரியா (ஸ்பெயின்) விலிருந்த ஒரு உரோமானிய மொசைக் கல்லில் உள்ள சித்தரிப்பு.

நீமியன் சிங்கம் (Nemean lion, கிரேக்கம்: Νεμέος λέων [1] இலத்தீன்: Leo Nemeaeus ) என்பது கிரேக்க தொன்மவியலின்படி நீமியாவில் வாழ்ந்த ஒரு கொடிய அசுரச் சிங்கமாகும். இது இறுதியில் ஹெராக்கிள்சால் கொல்லப்பட்டது. மனிதர்களின் ஆயுதங்களால் அதைக் கொல்ல முடியாது, ஏனெனில் அதன் தங்க ரோமங்கள் ஆயுதங்கள் ஊரூருவாமல் காத்தன. அதன் நகங்கள் மனிதர்களின் வாள்களை விட கூர்மையானவை, மேலும் அவை எந்த கவசத்தையும் வெட்டக்கூடியன.

இன்று, சிங்கங்கள் கிரேக்க விலங்குவளத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஆசிய சிங்கத்தின் கிளையினங்கள் முன்பு தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன. ஹெரோடோடசின் கூற்றுப்படி, பண்டைய கிரேக்கத்தில் சிங்கங்கள் அதிகமாக இருந்தன. ஜார்ஜ் ஷாலர் அவர்கள் கிமு 100 இல் சிர்கா வரை அந்தப் பகுதியில் சிங்கங்கள் இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

பெற்றோர்[தொகு]

ஹெஸாய்டால் [2] இதை ஆர்த்தஸின் சந்ததி எனவும், பொதுவாக சிமேரா என்று நம்பப்படும் ஒரு "பெண்" எனவும் குறிப்பிடுகிறார், மற்றவர்கள் அதை எச்சிட்னா என்று விளக்குகிறார்கள். [3] [4] [5] இது எராவால் வளர்க்கப்பட்டு, நீமியாவின் மலைகளில் மக்களை அச்சுறுத்துவதற்காக அனுப்பப்பட்டார். அப்பல்லோடோரஸின் கூற்றுப்படி [6], இது டைபனின் சந்ததி. மற்றொரு பாரம்பரியத்தில், ஏலியன் [7] (எபிமனைடுகளை மேற்கோள் காட்டி) மற்றும் ஹைஜினஸ் ஆகியோரால் கூறப்படுவது என்னவென்றால், [8] இந்த சிங்கம் சந்திர-பெண் தெய்வமான செலினின் குழந்தை, இது ஹேராவின் வேண்டுகோளின்படி சந்திரனில் இருந்து தூக்கி எறியப்பட்டது. [9]

ஹெராக்கிள்சின் முதல் வேலை[தொகு]

நீமியன் சிங்த்துடன் ஹெர்குலசின் சண்டையை சித்தரிக்கும் பீட்டர் பவுல் ரூபென்ஸ்சின் ஒவியம் .

ஹெராக்ளிசுக்கு யூரிஸ்டீயஸ் மன்னரால் (இவரது உறவினர்) அளிக்கபட்ட பன்னிரு வேலைகளில் , முதலாவது வேலை நீமியன் சிங்கத்தை கொல்வது ஆகும்.

இது கிளியோனா நகரத்திற்கு வரும் வரை ஹெராக்கிளஸ் சிங்கம் உலவும் அந்தப் பகுதியில் அலைந்தார். அங்கு அவர் ஒரு சிறுவனைச் சந்தித்தார், ஹெராக்கிள்ஸ் நீமியன் சிங்கத்தைக் கொன்று 30 நாட்களுக்குள் உயிரோடு திரும்பினால், நகரம் கிரேக்கக் கடவுளான ஜீயுசுக்கு ஒரு சிங்கத்தை பலியிடும்; ஆனால் அவர் 30 நாட்களுக்குள் திரும்பி வரவில்லை என்றாலோ அல்லது அவர் இறந்துவிட்டாலோ, சிறுவன் தன்னை ஜீயுசுக்கு தன்னை பலியிட்டுக்கொள்வான் என்றான். [6] மற்றொரு பதிப்பு, தனது மகனை சிங்கத்திடம் இழந்த மோலர்கோஸ் என்ற இடையன் ஹெர்குலெசை சந்திக்கிறார். அவர் 30 நாட்களுக்குள் திரும்பி வந்தால், ஜீயுசுக்கு ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்படும் என்று கூறினார். அவர் 30 நாட்களுக்குள் திரும்பவில்லை என்றால், அந்த ஆட்டை இறந்த ஹெராக்கிளசுக்கு ஒரு துக்கப் பிரசாதமாக பலியிடப்படும் என்றார்.

சிங்கத்தைத் தேடி அதைக் கண்டபோது, அதன் பொன் ரோமங்களின் அசாத்திய வலிமையை அறியாமல், அதைக் கொல்ல சில அம்புகளை ஹெராக்கிள்ஸ் பாய்ச்சினார். அந்த அம்பில் ஒன்று சிங்கத்தின் தொடையில் பட்டு அதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் துள்ளி விழுந்தபோது சிங்கத்தின் ரோமங்களின் வலிமையை அறிந்தார். சிறிது நேரம் கழித்து, ஹெராக்கிள்ஸ் சிங்கமானது அதன் குகைக்குத் திரும்பிச் செல்வதைக் கண்டார். குகைக்கு இரண்டு நுழைவாயில்கள் இருந்தன, அவற்றில் ஒன்றை ஹெராக்கிள்ஸ் அடைத்தார். பின்னர் அவர் மற்றொறொரு வாயில் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த இருண்ட குகையில் தனது கிளப் எனப்படும் கதையுடன் சிங்கத்தை நெருங்கி மிருகத்தை திகைக்க வைத்தார். சிங்கத்துடனான சண்டையின்போது, சிங்கம் ஹெராக்கிள்சின் விரல்களில் ஒன்றைக் கடித்தது. இறுதியில் சிங்கத்தின் கழுத்தை தனது கைகளால் நெரித்து ஹெராக்கிள்ஸ் கொன்றார்.

சிங்கத்தை கொன்ற பிறகு, தனது இடைக்கச்சையிலிருந்த கத்தியைக் கொண்டு அதன் தோலை உரிக்க முயன்றார், ஆனால் அது முடியவில்லை. பின்னர் கத்தியை ஒரு கல்லாலில் தீட்டி கூர்மைப்படுத்தி மீன்டும் முயன்றார், அப்போதும் அது முடியவில்லை. கடைசியில், வீரனின் நிலையை கவனித்த ஏதெனா, ஹெராக்கிள்ஸிடம் சிங்கத்தின் நகங்களில் ஒன்றை அதற்குப் பயன்படுத்துமாறு கூறினாள்.

முப்பதாம் நாளில் ஹெராக்கிள்ஸ் திரும்பி வந்தபோது, இறந்த சிங்கத்தின் உடலை தோள்களில் சுமந்துகொண்டு வந்தார். இதைக்ககண்ட யூரிஸ்டியஸ் மன்னர் ஆச்சரியமும் அச்சமும் அடைந்தார். பின்னர் யூரிஸ்டியஸ் அவரை மீண்டும் நகருக்குள் நுழைய தடை விதித்தார்; எதிர்காலத்தில், அவர் தனது பணிகளின் முடிவை நகர வாயில்களுக்கு வெளியே காண்பிக்கவேண்டும் என்றார். அவருக்காக கொடுக்கபட்ட அடுத்தடுத்து பணிகள் மேலும் கடினமானவையாக இருக்கும் என்று யூரிஸ்டியஸ் எச்சரித்தார். பின்னர் அவர் அடுத்த பணியை முடிக்க ஹெராக்ஸை அனுப்பினார். அப்பணியானது லேர்னியன் ஐதராவை அழிக்கும் பணி ஆகும்.

நீமியன் சிங்கத்தைக் கொன்றபிறகு அதன் தோலை உரித்து அதை ஹெராக்ஸ் அணிந்துகொண்டார், ஏனெனில் அது எந்த சக்திவாய்ந்த ஆயுதங்களிலிருந்தும் உடலை பாதுகாப்பதாக இருந்தது.

கலையில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீமியன்_சிங்கம்&oldid=3581269" இலிருந்து மீள்விக்கப்பட்டது