நிவேதனப் பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செந்நிற நெல்லில் ஆக்கப்பட்ட அவல்

இந்துக்களின் வழிபாட்டின்போது படைக்கப்படும் நிவேதனப் பொருட்கள்:

  • பொங்கல்
  • கடலை
  • அவல்: ஊறவைத்து மசித்து இடிக்கப்பட்ட நெல்லில் ஆக்கப்படும் உணவாகும். இது இனிப்பு மற்றும் தேங்காய்ப் பூவுடன் பிசையப்பட்டு அவல் தயாரிக்கப்படுகின்றது.


  • பிட்டு: திருவெம்பாவை காலங்களில் சைவ ஆலயங்களில் நடைபெறும் பூசை பிட்டுப் பூசை எனப்படும். சிவபெருமான் கங்கையாறு பெருக்கெடுத்தபோது பிட்டுக்கு மண்சுமந்து கூலியாளாக வந்து ஆட்கொண்ட திருவிளையாடலை குறித்து இது அனுட்டிக்கப்படுகின்றது.
  • கொழுக்கட்டை: பச்சை மாவினால் செய்யப்படும். இதன் உள்ளீடாக தேங்காய்ப்பூ,வெல்லம், கற்கண்டு கொண்ட கலவை வைக்கப்படும். நீள் வடிவில் காணப்படும்.
கொழுக்கட்டை- சென்னையில் நடைபெற்ற த.வி பத்தாண்டு சந்திப்பில் சிற்றுண்டியாக வழங்கப்பட்ட போது எடுத்த படம்
  • மோதகம்:பச்சை மாவினால் செய்யப்படும். இதன் உள்ளீடாக தேங்காய்ப்பூ,வெல்லம், கற்கண்டு கொண்ட கலவை வைக்கப்படும்.கோளவடிவில் காணப்படும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதனப்_பொருட்கள்&oldid=2531564" இருந்து மீள்விக்கப்பட்டது