நிரலோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிரலோட்டம் (ஆங் :hackathon) என்பது தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகள், யோசனைகள், தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு கூட்டம் ஆகும். . நிரலோட்டம் என்பது சில மணிநேரம், நாட்கள் அல்லது வாரங்கள் வரை நீடிக்கும். இங்கு பெரும்பாலும், கணினி நிரலாளர்கள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மற்றவர்களான, கணினி வரைகலைஞர், இடைமுக வடிவமைப்பாளர்கள், திட்ட மேலாளர்கள், கள வல்லுநர்கள் மற்றும் பலர் ஒன்று சேர்ந்து மென்பொருள் திட்டங்களில் தீவிரமாக ஒத்துழைக்கின்றனர்.

நிகழ்வின் முடிவில் செயல்படும் மென்பொருள் அல்லது வன்பொருளை உருவாக்குவதே நிரலோட்டத்தின் குறிக்கோள் ஆகும். நிரலோட்டம் பொதுவாக பின்வருவனற்றுள் குறிப்பிட்டத்தக்க கவனம் செலுத்துகின்றன, இதில் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழி , இயக்க முறைமை, ஒரு ஏபிஐ அல்லது பொருள் மற்றும் நிரலாளர்களின் புள்ளிவிவரக் குழு ஆகியவை அடங்கும். சில நேரங்களில், உருவாக்கப்படும் மென்பொருள் வகைக்கு எந்த தடையும் இல்லை.

சொற்பிறப்பியல்[தொகு]

"ஹேக்கத்தான்" என்ற சொல் " ஹேக் " மற்றும் " மராத்தான் " என்ற இரண்டு சொற்களின் ஒட்டுச்சொல்லாகும், இங்கு "ஹேக்" என்பது நிரலாக்கத்தின் ஆய்வு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது, மாறாக கணினி பாதுகாப்பை மீறுவதற்கான ஒரு குறிப்பானது என்ற பொருளில் அல்ல.

அமைப்பு[தொகு]

நிரலோட்டத்தின் நோக்கங்கள், விதிமுறைகள் மற்றும் விவரங்களைக் குறிப்பிட்டு ஒரு எளிய அறிமுகத்துடன் அல்லது தகவல்கள் அடங்கிய ஒரு வலைப்பக்கம் வழியாக பொதுவான தகவல்தொடர்புடன் நிரலோட்டத்தினை நடத்தும் அமைப்பானது நிகழ்ச்சியை தொடங்குகின்றன. நிரலோட்டத்தில் பங்கேற்க நிரலாளர்கள், பங்களிப்பவர்கள் பதிவு செய்கிறார்கள் மற்றும் பங்களிப்பவர்களின் பின்னணி மற்றும் திறன்களைத் நிரலோட்டத்தினை நடத்தும் அமைப்பு சலித்த பிறகு தகுதி பெறுகிறார்கள்.

நிரலோட்ட நிகழ்வு தொடங்கும் போது, பங்கேற்கும் நபர்கள் அல்லது அணிகள் தங்கள் நிரலாக்க பணிகளைத் தொடங்குகின்றன. நிரலோட்ட நிர்வாகி பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பர் மேலும் நிகழ்வில் சிக்கல்கள் எழும்போது உதவுவர்.

நிரலோட்டம் பல மணி முதல் பல நாட்கள் வரை நீடிக்கும். குறிப்பாக போட்டித்தன்மை வாய்ந்த நிரலோட்டம் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும், இங்கு சாப்பிடுவது போன்றவை பெரும்பாலும் முறைசாராதாகும், பல நாட்கள் நிகழும் நிர்லோட்டங்களில் உறக்கம் போன்றவை முறைசாராதாகும், பங்கேற்பாளர்கள் உறக்கப் பைகளுடன் நிகழ்வின் தளத்தில் உறங்குவார்கள்.

வழக்கமாக நிரலோட்டத்தின் முடிவில், தொடர்ச்சியான விளக்கமுறைகள் உள்ளன, அதில் ஒவ்வொரு குழுவும் அவர்தம் குழுவின் முடிவுகளை முன்வைக்கின்றன. சிறந்த யோசனைகளைப் தேர்ந்தெடுக்கவும், முன்னேற்றம் காணவும் பெரும்பாலும் பங்கேற்பாளர்கள் விளககத்தின்பொழுது காணொளிகளை இடுகையிடுகிறார்கள், பவர்பாயின்ட்கள் மற்றும் விவரங்களுடன் முடிவுகளைப் பற்றி வலைப்பதிவு செய்கிறார்கள், சமூக ஊடகங்களில் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள், கட்டற்ற நிரல்குறியீட்டிற்கான இடத்தை பரிந்துரைக்கின்றனர் மற்றும் பொதுவாக உருவாக்கப்பட்ட கருத்துக்களிலிருந்து பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ளவும், உருவாக்கவும் மற்றும் பகிர்வதன் மூலமாக நிரலோட்டத்தின் ஆரம்ப வேலை முடிந்தது.

சில நேரங்களில் போட்டிகளூம் நடைபெறும், இதில் நீதிபதிகள் குழு வென்ற அணிகளைத் தேர்வுசெய்கிறது, மேலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல நிரலோட்டங்களில், நீதிபதிகள் என்பவர்கள் நிரலோட்ட அமைப்பாளர்கள் மற்றும் புரவலர்களை உள்ளடக்கியவர்களாவர். பரிசுகள் சில நேரங்களில் கணிசமான தொகையாகும்: டெக் க்ரஞ்ச் சீர்குலைவு மாநாட்டில் ஒரு சமூக கேமிங் நிரலோட்டம் வெற்றியாளர்களுக்கு 250,000 டாலர் நிதியுதவி அளித்தது, அதே நேரத்தில் சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் [1] 2013 நிரலோட்ட வெற்றியாளர்களுக்கு 1 மில்லியன் செலுத்தியது, மிகப் பெரிய பரிசாகக் கருதப்ப்படுகின்றது.[2]

உள் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதலுக்கு[தொகு]

நிறுவனங்கள் தமது தொழில்சார்ந்த அல்லது ஊழியர்களின் பணிசார்ந்த பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வுகாண நிரலோட்ட நிகழ்ச்சியை பயன்படுத்துவது புதிய கலாச்சாரம் ஆகும்.

சில நிறுவனங்கள் தமது பொறியியல் ஊழியர்களால் புதிய தயாரிப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நிறுவனங்களுக்குள்ளே நிரலோட்டங்களை நடத்துகின்றன. எடுத்துக்காட்டாக, பேஸ்புக்கின் லைக் பொத்தான் ஒரு ஹேக்கத்தானின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.[3]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Biddle, Sam (November 22, 2013). "The "Biggest Hackathon Prize In History" Was Won By Cheaters". Valleywag.
  2. Williams, Alex (November 21, 2013). "Two Harvard University Alum Win Disputed Salesforce $1M Hackathon Prize At Dreamforce [Updated"]. https://techcrunch.com/2013/11/21/two-harvard-university-alum-win-salesforce-1m-hackathon-prize-at-dreamforce-for-mobile-service-to-create-reports/. 
  3. "Stay focused and keep hacking". www.facebook.com. 16 March 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரலோட்டம்&oldid=3381323" இருந்து மீள்விக்கப்பட்டது