கெய்சென்
கெய்சென் (Kaizen) (改善?), ஜப்பானிய மொழியில் "மேம்பாடு" அல்லது "தொடர் மேம்பாடு" எனப்படும். அது 改 ("கேய்") மற்றும் 善 ("சென்") ஜப்பானிய வார்த்தைகளிலிருந்து வருகிறது, அது "நன்மைக்கான மாற்றம்". கெய்சென் என்பது உற்பத்தி, பொறியியல், மற்றும் வணிக மேலாண்மை செயல்முறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கான ஒரு தத்துவம் ஆகும்.
கெய்சேனின் இரண்டு முக்கிய அம்சங்கள் பின்வருவன ஆகும்:
- அதிகரிக்கும் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும்
- அந்த பணியில் முழு தொழிலாளர்களை ஈடுபடுத்துவது.
வரலாறு
[தொகு]இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஜப்பான் நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் பல அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கும் போது கெய்செனுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. கெய்சென் என்ற வார்த்தை சீன மற்றும் ஜப்பானிய நாடுகளில், தொடர் முன்னேற்றம் அல்லது மேம்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தொழில் துறையில் டோயோடோ உற்பத்தி அமைப்பில் (TPS: Toyoto Production System) இந்த "கெய்சென்" என்ற வார்த்தை பெருமளவில் 1950-1960களில் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
கெய்சென் செயல்படும் முறை
[தொகு]கெய்சென் பிரச்சனைகளையும் இடையூறுகளையும் எதிர்மறையாக பார்ப்பதில்லை மாறாக நிலையான மேம்பாட்டிற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மாற்றத்தை கொண்டு வர கெய்சென் பிரச்சனைகளை கண்டுபிடித்து, அறிவித்து அதை நிவர்த்தி செய்கிறது.[1]
கெய்செனுக்கான பத்து கொள்கைகள்
[தொகு]கெய்சன் பெரும்பாலும் பின்வரும் வழிகாட்டுதல்கள் வடிவத்தில் வழங்கப்படுகிறது[2]:
- ஒரு செயலை இப்படித்தான் செய்யவேண்டும் என்ற நிலையான எண்ணத்தை விட்டுவிடுங்கள்
- குறை கூறாதீர்கள் - மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விருப்புகிறீர்களோ அப்படி மற்றவர்களை நடத்துங்கள்
- நல்லதையே நினைக்கவும் - "செய்ய முடியாது" என்பதை தவிருங்கள்
- பூரணத்தை எதிர்பார்க்காதீர்கள் - 50% சதவித முன்னேற்றமும் நன்மையே
- தவறுகளை கண்டவுடன் சரி செய்ய முயலுங்கள்
- மேம்பாடுகளை செய்ய நிறைய பணம் செலவிடாதீர்கள்
- பிரச்சினைகள் நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கிறது
- மூல காரணம் கிடைக்கும் வரை நீங்கள் குறைந்தது ஐந்து முறையாவது ஏன், ஏன் என கேட்டுகொண்டே இருங்கள்
- பத்து பேருடைய சிறந்த ஞானம் என்றுமே ஒரு நிபுணத்துவம் பெற்றவரை விட நல்லதாக இருக்கும்
- முன்னேற்றத்திற்கு எல்லையே இல்லை