கணினி வரைகலைஞர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணினி வரைகலைஞர் (Graphic Designer, Graphic Artist) என்பவர் கணினி உதவியுடன் பக்கங்கள் வடிவமைத்தல், நூல்களுக்கு முன்னட்டைகள் வடிவமைத்தல், கணினி மூலம் சித்திரங்கள் வரைதல், மற்றும் இலச்சினைகள் உருவாக்குதல், கண்கவர் சுவரொட்டிகள், பதாதைகள் என்பன வடிவமைத்தல், உருமாற்றம் செய்தல், பழைய படங்களை நவீன காலத்திற்கேற்ப வடிவமைத்தல், நிழற்படங்களை ஒழுங்கமைத்தல் முதலிய பணிகளைச் செய்பவர்
கணினிக்கான நவீன எழுத்துருக்கள் வடிவமைத்தல், சகல மொழிகளிலும் யுனிகோட் மற்றும் ரீரீஎப் (Ttf) எழுத்துருக்கள், போன்றவற்றைக்கொண்டு எழுதுதல் போன்றனவும் கணினிப் பக்கவடிவமைப்பாளரினால் மேற்கொள்ளப்படுகிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், மின்னூல்கள், மற்றும் இணையத்தள வடிவமைப்புக்கும் கணினிப் பக்கவடிவமைப்பாளர்களே சாலவும் பணியாற்றுகிறார்கள்.
கணினிப் பக்கவடிவமைப்புக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள்[தொகு]
முதலியனவும் மற்றும் பலவும்.
பத்திரிகை வடிவமைப்புக்குப் பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் பேஜ்மேக்கர், போட்டோசாப் மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. வளைகுடா நாடுகளில் இல்லஸ்டிரேட்டர் மென்பொருளைப் பயன்படுத்தியே பத்திரிகை மற்றும் இதர ஊடகங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
பேஜ் மேக்கரின் புதிய விரிவாக்கம் நிறுத்தப்பட்டதால் இன்று பாவனையிலிருந்து அது பெரும்பாலும் விலகிவிட்டது. அதற்குப் பதிலாக அடோப் இன்டிசைனே பயன்பாட்டில் உள்ளது.