நிம்பாகெரா
நிம்பாகெரா
Nawabo ka nimbaheda | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பைஞ்சுதை நகரம் | |
ஆள்கூறுகள்: 24°37′N 74°41′E / 24.62°N 74.68°E | |
நாடி | இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | சித்தோர்கார் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | யுக் சோனி, சோனி டென் |
பரப்பளவு | |
• மொத்தம் | 24 km2 (9 sq mi) |
ஏற்றம் | 437 m (1,434 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 86,453 |
• அடர்த்தி | 3,600/km2 (9,300/sq mi) |
மொழி | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 312601, 312617 (கைலாசு நகர்) |
தொலைபேசி குறியீடு | +91-1477 |
வாகனப் பதிவு | RJ-09 |
நிம்பாகெரா (Nimbahera) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சித்தோர்கார் நகரத்திலிருந்து 32 கி. மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து 350 km (220 mi) கி. மீ (220 மைல்) தொலைவில் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. நிம்பாகோரா தொடருந்து மற்றும் சாலை இரண்டின் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது. இது அஜ்மீரை இரத்லாமுடன் இணைக்கும் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது.
நிம்பாகெராவில் மேவதி சமூகத்தின் கணிசமான மக்கள் தொகை உள்ளது.
புவியியல்
[தொகு]நிம்பாகெரா 24°37′N 74°41′E/24.62 °N 74.68 °E/ புவியியல் கூற்றில் அமைந்துள்ளது.[1]
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிம்பாகோராவின் மக்கள் தொகை 78,123 ஆகும்.[2] நிம்பாகோரா மக்கள் தொகையில் 19% பேர் 6 வயதிற்குப்பட்டவர்கள்.
பொருளாதாரம்
[தொகு]நிம்பாகெரா கல், கட்டுமானப் பொருளாகவும், பைஞ்சுதை உற்பத்தியில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான சுண்ணக்கல்லிற்கு பெயர் பெற்றது. இதனால் இப்பகுதி பைஞ்சுதை தொழில்களுக்கு பொருத்தமான இடமாகவும், நல்ல வேலைவாய்ப்பின் ஆதாரமாகவும் உள்ளது. நிம்பாகெராவில் ஜே. கே. பைஞ்சுதை, நிம்பாகெரா & மன்க்ரோல், வொண்டர் பைஞ்சுதை மற்றும் நுவோகோ பைஞ்சுதை ஆகிய நான்கு சிமென்ட் ஆலைகள் உள்ளன. வொண்டர் பைஞ்சுதை தனது முதல் ஆலையின் மூலம் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் பைஞ்சுதையினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Nimbahera
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.