நிகால் சிங் வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகா மாவட்டம், நிகால் சிங் வாலாவின் அகலப் பரப்புக் காட்சி

நிகால் சிங் வாலா (Nihal Singh Wala) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். மோகா மாவட்டத்தின் மிகப் பெரிய ஒரு தாலுக்காவான இந்நகரம் குரு கோபிந் சிங் மார்க்கில் அமைந்துள்ளது. மோகா, பர்னாலா, பரித்கோட் மற்றும் லூதியானா முதலிய நகரங்கள் நிகால் சிங் வாலாவிற்கு அருகில் உள்ளன. மேலும், இந்நகருடன் 34 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் 150 – க்கும் மேற்பட்ட நலிவடைந்த ஆலைகள் கொண்ட நகரங்களின் பட்டியலில் கன்னா மற்றும் பாகா புராணா நகரங்களை அடுத்து நிகால் சிங் வாலா 13 – ஆவது இடத்தில் உள்ளது. இந்நகரின் மக்கள் தொகை சுமார் 5000 ஆகும். இங்கு ஒரு நகராட்சி மன்றமும் உண்டு.

அமைவிடம்[தொகு]

30.59190 வடக்கு 75.28040 என்ற அடையாள ஆள்கூறுகளில் நிகால் சிங் வாலா அமைந்துள்ளது[1]

கல்வி[தொகு]

இராயல் கான்வெண்ட் பள்ளி, கிரீன் வேலி கான்வெண்ட் பள்ளி, கமலா நேரு பள்ளி, அரசினர் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி போன்ற முன்னணி கல்விக்கூடங்களும் ஐ.எம்.டி கல்லூரி மானுக், பாட்டோ இரா சிங் அரசு கல்லூரி முதலிய கல்லூரிகளும் இந்நகரில் உள்ளன.

அரசியல்[தொகு]

முன்னாள் அமைச்சர் தர்சன் சிங் கோட்டா, பாகா புராணாவின் சட்டமன்ற உறுப்பினர் மாகிசிந்தர் சிங், சட்டமன்ற உறுப்பினர் பிபி ராச்விந்தர் கௌர் பாகிக் முதலிய அரசியல் பிரமுகர்கள் நிகால்சிங் வாலாவைச் சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகால்_சிங்_வாலா&oldid=2082118" இலிருந்து மீள்விக்கப்பட்டது