நிகர்நிலை உலர் தாவரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு எண்ணிம உலர்தாவர ஆவணம் (Swiss Orchid Foundation at the Herbarium Jany Renz -web site)

நிகர்நிலை உலர் தாவரகம் (Virtual herbarium) என்பதில், உலர் தாவரகத்தின் ஆவணங்களை, எண்ணிமம் செய்யப்பட்ட ஆவணங்களாக மாற்றி பாதுகாக்கின்றனர். இதனால் சிறப்புத்தன்மை வாய்ந்த ஆவணங்களைக் கையாளத் தெரியாத எவரும் கையாள முடியும். ஆவண இழப்பும் வெகுவாகக் குறைகிறது. உலர் தாவரக ஆவணங்களைப் பாதுகாத்தல் என்பது துறைசார்ந்த மனித உழைப்பும், பராமரிப்புச் செலவும், அதற்குரிய பாதுகாப்பு சூழ்நிலையும் தேவைப்படுகின்றன. பல நிலைகளில் சரிபார்க்கப்பட்ட ஆவணத்தினை, பட வடிவமாக, அதாவது எண்ணிம வடிவமாக மாற்றினால், அதனை எளிதாக, எச்சூழ்நிலையிலும் யாரும் பயன்படுத்தலாம். பாதுகாக்கப்பட்ட அறை, அதற்குரிய நடைமுறைகள் வெகுவாக குறைகின்றன. இதனால் இந்த ஆவணங்களை பலர் பார்த்து, பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையும் அதிகரிக்கும். இருப்பினும், இவற்றினை இணையத்தில் பயன்படுத்தும் செய்தல் கடினமான பணியாகும். ஏனெனில், உருவாக்கப்படும், ஒவ்வொரு ஆவணமும், சில நூறு மெகாபைட்டுகள் அளவுள்ளதாக இருக்கின்றது.[1] அதனால் அதிவேக இணைய இணைப்பும், திறன் மிகுந்த கணினியும் தேவைப்படுகின்றன.

வழிமுறைகள்[தொகு]

ஒரு உலர் தாவரகத்தின் ஆவணமானது, முதலில் நூல் மின்வருடியாலோ, நிலைப் படக்கருவியாலோ படம் எடுக்கப்படுகிறது. பிறகு உலர் தாவரக எண்ணிம ஆவணமாக மாற்றப்படுகிறது. இதற்குரிய மேம்படுத்தக் கருவிகளை இணைய ஆவணகம், இன்னும் பிற பொது நல அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இக்கருவிகளால், உலர் தாவரகத்தின் காகித ஆவணங்கள், பெரும்பாலும் சேதப்படுவதில்லை. எடுக்கப்பட்ட படங்கள் பின்பு, உரிய வடிவத்தில் கணிய ஆவணமாக, படத்தாவரத்திற்குரிய விவரங்களோடு இணைக்கப்படுகின்றன. இதற்குரிய திட்டங்களின் முன்னோடி, எர்பர் எண்ணிமம் (Herbar Digital ) எனலாம்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகர்நிலை_உலர்_தாவரகம்&oldid=3936898" இலிருந்து மீள்விக்கப்பட்டது