நான்சி ரேகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்சி டேவிசு ரேகன்
Nancy Reagan.jpg
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 20, 1981 – சனவரி 20, 1989
முன்னவர் ரோசலின் கார்ட்டர்
பின்வந்தவர் பார்பரா புஷ்
கலிபோர்னியாவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 3, 1967 – சனவரி 7, 1975
முன்னவர் பெருனீசு லேய்ன்
பின்வந்தவர் குளோரியா சாட்ஜியன்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 6, 1921(1921-07-06)
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்பு மார்ச்சு 6, 2016(2016-03-06) (அகவை 94)
பெல் ஏர் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ.
வாழ்க்கை துணைவர்(கள்) ரானல்ட் ரேகன் (தி. 1952–2004, அவரது மரணம்)
பிள்ளைகள் பேட்டி டேவிசு, ரான் ரேகன்
படித்த கல்வி நிறுவனங்கள் இசுமித் கல்லூரி
பணி ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
சமயம் பிரெசுபைட்டேரியர்
கையொப்பம்

நான்சி டேவிசு ரேகன் (Nancy Davis Reagan, பிறப்பு: ஆன் பிரான்செசு ராபின்சு; சூலை 6, 1921 – மார்ச் 6, 2016) ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவராக இருந்த ரானல்ட் ரேகனின் மனைவி ஆவார். இவர் 1981 முதல் 1989 வரை ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டியாக இருந்துள்ளார்.

நான்சி நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் பிறந்தார். அவரது பிறப்பிற்குப் பிறகு பெற்றோர்கள் மணமுறிவுற்றனர். அவரது அன்னை நடிப்புத் தொழிலில் ஈடுபட நான்சி தனது அத்தை, மாமாவுடன் மேரிலாந்தில் வளர்ந்தார். நான்சியும் ஆலிவுட் சென்று 1940களிலும் 1950களிலும் நடிகையாக விளங்கினார். டோனோவன் மூளை, நைட் இன்டு மார்னிங், ஹெல்கேட்ஸ் ஆஃப் நேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

1952இல் அப்போது வெள்ளித்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக இருந்த ரானால் ரேகனை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன: ரான் ரேகன், பேட்டி டேவிசு. ரேகன் 1967 முதல் 1975 வரை கலிபோர்னியாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது நான்சி கலிபோர்னியாவின் முதல் சீமாட்டியாக விளங்கினார். வளர்ப்பு தாத்தாப்பாட்டி திட்டத்தில் இணைந்தார்.

தனது கணவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சனவரி 1981இல் நான்சி ரேகன் ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆனார். வெள்ளை மாளிகை பீங்கான் கோப்பைகளை மாற்ற முயற்சித்தற்காக நான்சி விமரிசிக்கப்பட்டார். இதேபோல உயர்குடி நாகரிகப்பாணியும் கவனத்தை ஈர்த்ததுடன் விமரிசனங்களை வரவழைத்தது. தனது கணவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது போதை மருந்துகளுக்கு எதிராக "ஜஸ்ட் சே நோ" இயக்கத்தை நிறுவினார்.[1]

தனது கணவரை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். 1981இல் தன் கணவர் மீதான கொலை முயற்சியை அடுத்து குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட இவர் 1988இல் சோதிடர்களை நியமித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ரானல்ட் ரேகன் மீது இவருக்கு மிகுந்த தாக்கம் இருந்தது. அவரது தனிப்பட்ட முடிவுகளிலும் தொடர்பாடல் முடிவுகளிலும் இவரது குறுக்கீடு இருந்தது.

1989இல் ரேகன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினர். 1994இல் ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவரின் உடல்நலத்தைப் பேணுவதில் நான்சி முழுநேரமும் ஈடுபட்டார். 2004ஆம் ஆண்டில் ரானல்ட் ரேகன் மறைந்தார். ரேகன் நூலகத்தில் மிகவும் செயற்பாட்டுடன் விளங்கிய நான்சி தனது மரணம் வரை குருத்தணு ஆய்வை ஆதரித்தும் பேசியும் வந்தார்.

மரணம்[தொகு]

நான்சி மார்ச் 6, 2016 அன்று லாசு ஏஞ்செல்சில் உள்ள பெல் ஏர் வீட்டில் மரணமடைந்தார்.[2]குருதி விம்மு இதயத் திறனிழப்பால் உயிரிழந்தார்.[3] அவருக்கு 94 அகவைகள் முடிவுற்றிருந்தன.[2] மார்ச் 11 அன்று அவரது கணவரின் கல்லறைக்கு அடுத்து ரானல்ட் ரேகன் குடியரசுத் தலைவருக்கான நூலகத்தில் புதைக்கப்பட உள்ளார்.[3]

மக்கட்வெளிப் பண்பாட்டில்[தொகு]

  • 2013இல் வெளியான தி பட்லர் திரைப்படத்தில் இவரது வேடத்தில் ஜேன் போன்டா நடித்துள்ளார். ஆலன் ரிக்மேன் ரானல்ட் ரேகனாக நடித்தார்.
  • மிஷன் ஆப் பர்மாவின் 2006ஆம் ஆண்டு இசைத்தொகுப்பு, தி ஓப்லிடெரட்டியில் ஒரு பாட்டு இவரது பெயரைக் கொண்டுள்ளது: "நான்சி ரேகனின் தலை".
  • சன் சிட்டி கேர்ல்சு 1987இல் வெளியிட்ட ஹார்சு காக் பெப்னெர் என்ற இசைத்தொகுப்பில் ஒரு பாட்டு "நான்சி ரேகன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Nancy Reagan - Her Causes - Just Say No". Ronald Reagan Presidential Foundation. ஜனவரி 2, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 22, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Lou Cannon (March 6, 2016). "Nancy Reagan, an Influential and Stylish First Lady, Dies at 94". த நியூயார்க் டைம்ஸ்.com. March 6, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Plott, Monte; Leopold, Todd (March 6, 2016). "Nancy Reagan dead at 94". CNN (Turner Broadcasting System, Inc.). http://www.cnn.com/2016/03/06/politics/nancy-reagan-dies-obit/. பார்த்த நாள்: March 6, 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_ரேகன்&oldid=3560622" இருந்து மீள்விக்கப்பட்டது