உள்ளடக்கத்துக்குச் செல்

நானும் ரௌடி தான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நானும் ரவுடி தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நானும் ரௌடி தான்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்விக்னேஷ் சிவன்
தயாரிப்புதனுஷ் (நடிகர்)
கதைவிக்னேஷ் சிவன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புவிஜய் சேதுபதி
நயன்தாரா
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
ராதிகா
ஆர். ஜே. பாலாஜி
ஒளிப்பதிவுஜோர்ஜ் வில்லியம்ஸ்
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்வன்டர்பார் பிலிம்ஸ்
விநியோகம்லைக்கா தயாரிப்பகம்
வெளியீடு21 ஒக்டோபர் 2015[1]
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்865 மில்லியன் (US$11 மில்லியன்) (மூன்றாவது வாரத்தில்) [2]

நானும் ரௌடி தான் (Naanum Rowdy Dhaan) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த கறுப்பு நகைச்சுவை-அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[3] இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கினார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். தன்னுடைய வன்டர்பார் பிலிம்ஸ் மூலம் நடிகர் தனுஷ் இத்திரைப்படத்தினை இயக்கினார். அத்துடன் இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார்.[4] புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 75 நாட்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இடம்பெற்றன.[5] 2015 ஆம் ஆண்டு அக்டோபர்,21 ஆம் தேதி வெளிடப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.[6]

தயாரிப்பு[தொகு]

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், போடா போடி திரைப்படத்தினை இயக்கிய பின்னர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை முதன்மைக் கதாப்பாத்திரமாக வைத்து ஓர் திரைப்படம் எடுக்கவுள்ளதாக அறிவித்தார். அத்திரைப்படதிற்கு "நானும் ரவுடி தான்" எனும் தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அனிருத்துடன் இணைந்து நடிப்பதற்காக முதன்மைப் பெண் கதாப்பாத்திரமாக சமந்தாவை நடிக்கச் செய்யலாம் எனவும் படக்குழு தீர்மானித்தது.[7] இதற்கிடையில் ஒரு மாதங்களின் பின்னர் திரைப்படத்தில் நடிப்பதற்கு அனிருத் மறுப்புத் தெரிவித்தார். ஆகவே அவரின் இடத்தில் மற்றுமொரு கதாநாயகனைத் தெரிவுசெய்ய வேண்டிய தேவை படக்குழுவிற்கு ஏற்பட்டது.[8]

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்த இயக்குநர் கௌதம் மேனனால் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் கௌதமுடன் ஒப்பந்தம் கைச்சாத்தியுள்ளதாகவும் அனிருத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பாளராக அப்போது ராஜா ராணி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜோர்ஜ் வில்லியம்சும் சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பு ராஜனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[9] ரவுடிக் கும்பல் ஒன்றின் பிடியில் மாட்டுப்பட்டிருக்கும் 19 வயதுச் சிறுவன் பற்றியதே கதைக்கருவாகும் எனவும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்களை, மும்பை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் எடுக்கவுள்ளதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.[10] விக்னேச் சிவனின் கதையில் நடிக்க விருப்பம் கொண்ட நடிகை லாவண்யா (Lavanya Tripathi) காது கேட்காத பெண் ஒருவராகவும் திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரமாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[11] எனினும் இறுதியில் படத்தின் தயாரிப்புகள் தோல்வி கண்டன, ஆகையால் விக்னேஷ் சிவன் த்னது திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் ஒருவருக்காகவும் கதாநாயகன் ஒருவருக்காகவும் காத்திருந்தார்.[12]

2014 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தித் தினமான ஆகஸ்ட் 29 அன்று த்னது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய வன்டர்பார் பிலிம்ஸ் மூலம் இத்திரைப்படத்தை இயக்குவதாகவும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விபரங்கள் பற்றியும் அதற்கு வைக்கவுள்ள தலைப்பு பற்றியும் குறிப்பிட்டார். ஆகவே இறுதியில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[4] டிசம்பர் 2014 இல் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகின. படத்தின் ஆபத்தான காட்சிகள் அனைத்தும் 40 நாட்களாக புதுச்சேரியில் படமாக்கப்பட்டன. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் இத்திரைப்படத்தின் முதற் படப்பிடிப்புகள் இடம்பெற்றன.[13] இதற்கிடையில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுள் ஒருவராக ஆர். ஜே. பாலாஜியும் இணைந்து கொண்டார்.[14] திரைப்படத்தில் வருகின்ற சில காட்சிகளுக்காக விஜய் சேதுபதி உடல் எடையினை குறைக்க வேண்டும் விக்னேஷ் சிவன் என அறிவித்தன் காரணமாகக் கடின முயற்சியுடன் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு தனது உடல் எடையை விஜய் சேதுபதி குறைத்துக்கொண்டார்.[15] ரவுடிக் கும்பலில் ஒருவராக நடிப்பதற்காக 2014 டிசம்பரில் நடிகர் ஆனந்த் ராஜ் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Naanum Rowdy Dhaan Movie Database". tamilcinemainfo.com. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
 2. "Naanum Rowdy Dhaan Nears 50 Crores Worldwide" இம் மூலத்தில் இருந்து 2015-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151118171448/http://www.indianmoviestats.com/tamil/kollywood-news/naanum-rowdy-dhaan-nears-50.html. 
 3. "Naanum Rowdy Dhaan: A thoroughly entertaining black comedy" (in en). The Hindu. 22 October 2015. http://www.thehindu.com/entertainment/naanum-rowdy-dhaan-a-thoroughly-entertaining-black-comedy/article7792538.ece. 
 4. 4.0 4.1 "Vijay Sethupathi, Nayanthara for Dhanush". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014.
 5. Srinivasa Ramanujam (20 October 2015). "What's the story behind Naanum Rowdy Dhaan". The Hindu.
 6. "Naanum Rowdy Dhaan Movie Review, Rating, Box Office Report". 23 October 2015. http://www.firstshowreview.com/2015/10/naanum-rowdy-dhaan-movie-review-rating.html. பார்த்த நாள்: 23 October 2015. 
 7. Ramanujam, Srinivasa (7 April 2013). "Anirudh to debut with 'Podaa Podi' director?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
 8. "Anirudh changes his mind for Vijay, anirudh, vijay". Behindwoods. 20 May 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 9. "Director Vignesh Shivan will start his next project by January". Behindwoods. 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 10. Ramanujam, Srinivasa (19 November 2013). "Gautham Karthik teams up with Vignesh Shivan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 31 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
 11. Ramanujam, Srinivasa (10 January 2014). "Lavanya Tripathi is Gautham Karthik's love". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 12 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
 12. http://www.indiaglitz.com/-i-was-approached-for-the-lead-role-in-naanum-rowdy-dhaan-ashok-selvan-tamil-videos-63083.html
 13. "Vijay Sethupathi-Nayanthara start romancing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 December 2014.
 14. "RJ Balaji join hands with Vijay Sethupathy". சிஃபி. 6 December 2014. Archived from the original on 8 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 15. "Vijay's slim look took two months". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 December 2014.
 16. "Anand Raj's role similar to one in Kill Dhill". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 January 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]