உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டு கெளுத்தி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டு கெளுத்தி
Mystus bleekeri
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
பெருவகுப்பு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Mystus bleekeri
இருசொற் பெயரீடு
Mystus bleekeri
(Day, 1877)
வேறு பெயர்கள்

Macrones bleekeri (non Jenkins, 1910)[2]
Mystus bleekeri (non Jenkins, 1910)[2]
Aoria bleekeri (Day, 1877)[3]
Macrones bleekeri Day, 1877[3]
Bagrus keletius (non Valenciennes, 1840)[4]

நாட்டு கெளுத்தி ( அறிவியல் பெயர் : Mystus bleekeri ) ( ஆங்கிலம் : டேஸ் மிஸ்டஸ் ) என்பது பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மிஸ்டஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு நன்னீர் மீன் ஆகும்.

விளக்கம்[தொகு]

இந்த மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். இவை சுமார் 43 செ.மீ நீளம் வரை வளரும். இதன் முதுகுத் துடுப்பில் முள் இருக்கும். இதன் உடல் நிறம் பச்சை கலந்த சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெளிர் நிறமாகவும் இருக்கும்.

பரவல்[தொகு]

இந்த வகை மீன்கள் வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாக்கித்தான், மியான்மர், பூட்டான், இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. [5]

உணவுப் பழக்கம்[தொகு]

இந்த மீன் பொதுவாக நீர்வாழ் பூச்சிகள், கொசுப்புழுக்கள், சிறிய இறால், அழுகிய கரிமப் பொருட்களை விரும்பி உண்ணும்.

இனப்பெருக்கம்[தொகு]

இவை ஆண்டில் மே முதல் ஆகத்து வரையிலான காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சூன்-சூலை பருவத்தில் உச்ச கட்டத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு வயது வந்த மீன் இனப்பெருக்கப் பருவத்தில் சராசரியாக சுமார் 13,000-39,000 முட்டைகள் இடும்.முட்டைகள் ஒட்டக்கூடியதாகவும், கிரீம் நிறத்தில் இருக்கும்.

வங்கதேசத்தில் தற்போதைய நிலை[தொகு]

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலிலின்படி (2000) இந்த இனம் வங்கதேசத்தில் இன்னும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கபடவில்லை.

குறிப்பு[தொகு]

  1. "Mystus bleekeri". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2010. பார்க்கப்பட்ட நாள் 24/10/2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Eschmeyer, W.N. (ed.) (2005) Catalog of fishes. Updated database version of May 2005., Catalog databases as made available to FishBase in May 2005.
  3. 3.0 3.1 Roberts, T.R. (1994) Systematic revision of Asian bagrid catfishes of the genus Mystus sensu stricto, with a new species from Thailand and Cambodia., Ichthyol. Explor. Freshwat. 5(3):241-256.
  4. Talwar, P.K. and A.G. Jhingran (1991) Inland fishes of India and adjacent countries. Volume 2., A.A. Balkema, Rotterdam.
  5. বাংলা নিউজ ২৪.কম
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டு_கெளுத்தி_மீன்&oldid=3686212" இலிருந்து மீள்விக்கப்பட்டது