உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது இந்திய தேசிய காங்கிரசு கட்சியினால் 1985ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதாகும். இது நாட்டின் ஒற்றுமைக்காகவும் இந்தியாவின் பல்வேறு சமய,மொழி,சாதி மற்றும் குமுகக்குழுக்களிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. கலை,அறிவியல்,பண்பாடு,கல்வி,இலக்கியம்,இதழியல் மற்றும் பொதுவாழ்வில் முதன்மையானவர்களைக் கொண்ட பரிந்துரை குழுவினால் விருது பெறுவோர் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். விருது இந்திய ரூபாய்கள் 1.51இலக்கமும் பாராட்டிதழும் கொண்டது. இந்திராகாந்தி இறந்த நாளான 31 அக்டோபர் அன்று இவ்விருது வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றோர்[தொகு]

 • சுவாமி இரங்கநாதானந்தா (1987)
 • பாரத் சாரணர் படை (1987)
 • அருணா அசப் அலி(1987)
 • பி.என்.அக்சர் (1990)
 • எம். எஸ். சுப்புலட்சுமி (1990)
 • இராசீவ் காந்தி (இறப்பின் பின்னர்)
 • பரம்தாம் ஆசிரமம், வார்தா,மகாராட்டிரம்
 • ஆசார்யா ஸ்ரீதுளசி
 • முனை.பீஷாம்பர் நாத் பாண்டே
 • சர்தார் பியாண்ட் சிங் (இறப்பின் பின்னர்) மற்றும் நட்வர் தக்கர் (இணைந்து)
 • காந்தி பொதுவாழ்வு மையம், கர்நாடகம்
 • நாட்டு ஒற்றுமைக்கான இந்திராகாந்தி மையம்,சாந்திநிகேதன்
 • முனை.ஏ பி ஜே அப்துல்கலாம்
 • சங்கர் தயாள் சர்மா (இறப்பின் பின்னர்)
 • பேரா.சதீஷ் தாவன்
 • எச் வை சாரதா பிரசாத்
 • ராம்-ரகீம் நகர் குடிசைவாழ்வோர் சங்கம், அகமதாபாத்
 • அமான் பதீக் - அமைதி தன்னார்வலர் குழு,அகமதாபாத்
 • ராம் சிங் சோலங்கி மற்றும் சுனில் தமைச்சே (இணைந்து)
 • ஆசார்யா மகாபிரஞ்ணா (2002)
 • சியாம் பெனகல் (2003)
 • மகாசுவேதா தேவி(2004)
 • சாவேத் அக்தர் (2005)
 • ஜே எஸ் பந்தூக்வாலா மற்றும் ராம் புனியானி (இணைந்து)(2006)[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. herenow4u.net , accessed Apr 23, 2008.
 2. www.congresssandesh.com/june-2005/june2005.pdf.

மேலும் பார்க்க[தொகு]