நாஞ்சிங்கின் பீங்கான் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாஞ்சிங்கின் பீங்கான் கோபுரம்
Porcelain Tower of Nanjing - Night View.jpg
புனரமைக்கப்பட்ட பீங்கான் கோபுரம்

நாஞ்சிங்கின் பீங்கான் கோபுரம் (Porcelain Tower of Nanjing) என்பது சீனாவின் நாஞ்சிங்கில் வெளிப்புற கின்குவாய் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று தளமாகும். 15 ஆம் நூற்றாண்டில் மிங் வம்சத்தின் போது கட்டப்பட்ட அடுக்குத் தூபி இவற்றின் பெரும்பாலான பகுதிகள் 19 ஆம் நூற்றாண்டில் தைப்பிங் கிளர்ச்சியின் போது அழிக்கப்பட்டது. இதன் நவீன பிரதி இப்போது நாஞ்சிங்கில் உள்ளது. [1]

2010 ஆம் ஆண்டில், சீன தொழிலதிபர் வாங் ஜியான்லின், இதன் புனரமைப்புக்காக நாஞ்சிங் நகரத்திற்கு ஒரு பில்லியன் யுவான் (156 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடை அளித்தார். இது சீனாவில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய ஒற்றை தனிப்பட்ட நன்கொடை என்று கூறப்படுகிறது. திசம்பர் 2015 இல், நவீன கோபுரமும், சுற்றியுள்ள பூங்காவும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. [2]

வரலாறு[தொகு]

நாஞ்சிங் கோபுரத்தின் வளைந்த கதவின் அசல் தொகுதிகள், இப்போது மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு நாஞ்சிங் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

இந்தக் கோபுரம் யோங்கிள் பேரரசரின் ஆட்சியில் ( 1402–1424) வடிவமைக்கப்பட்டது. சிறிது காலம் கழித்து 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதன் கட்டுமானம் தொடங்கியது. ஜோஹன் நியுஹோஃப் போன்ற ஐரோப்பிய பயணிகள் இதைப் பார்வையிட்டபோது மேற்கத்திய உலகத்தால் இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. [3] சில நேரங்களில் இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. வெளி உலகின் வெளிப்பாட்டிற்குப் பிறகு, கோபுரம் உள்ளூர் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற கலாச்சாரங்களுக்கான தேசிய புதையலாகக் காணப்பட்டது.

மார்ச் 25, 1428 அன்று, பேரரசர் சுவாண்டே என்பவர் ஜெங் ஹீ என்பவருக்கு நாஞ்சிங்கில் உள்ள பெரிய பாயோன் கோயிலை புனரமைக்கவும், பழுதுபார்ப்பதற்குமான மேற்பார்வையை ஏற்குமாறு உத்தரவிட்டார்.[4] கோயிலின் கட்டுமானம் 1431 இல் முடிக்கப்பட்டது.[5]

1801 ஆம் ஆண்டில், கோபுரம் மின்னலால் தாக்கப்பட்டு அதன் முதல் நான்கு தளங்கள் சேதமாயின. ஆனால் இது விரைவில் மீட்டெடுக்கப்பட்டது. கிரான்வில் கோவர் லோச்சின் என்பவர் 843 ஆம் ஆண்டில் எழுதிய த குளோசிங் ஈவன்ட்ஸ் ஆப் த காம்பெயின் இன் சைனா என்ற புத்தகத்தில் கோபுரம் 1840 களின் முற்பகுதியில் இருந்ததைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளது. 1850களில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரான, தைப்பிங் கிளர்ச்சி நாஞ்சிங்கை அடைந்து கிளர்ச்சியாளர்கள் நகரைக் கைப்பற்றியதால் கோபுரத்தைச் சுற்றியுள்ள பகுதி அழிந்தது. அவர்கள் பௌத்த உருவங்களை அடித்து நொறுக்கி, சிங் இராணுவத்தை கண்காணுக்கும் தளமாக இருந்த உள் படிக்கட்டுகளை அழித்தனர். அமெரிக்க மாலுமிகள் 1854 மே மாதம் நகரத்தை அடைந்து வெற்று கோபுரத்தைப் பார்வையிட்டனர். 1856 ஆம் ஆண்டில், ஒரு சட்டவிரோதப் பிரிவு நகரத்தை கைப்பற்றவும், குண்டு போடுவதற்காக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவோ [6] அல்லது அதன் புவிசார் பண்புகள் குறித்த மூடநம்பிக்கை பயத்தின் காரணமாகவோ இந்தக் கோபுரத்தை அழித்தது. [7] இதற்குப் பிறகு, மற்ற கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட கோபுரத்தின் எச்சங்கள் காப்பாற்றப்பட்டன. அதே சமயம் அண்மையில் எழுச்சி பெறும் வரை அந்த இடம் செயலற்ற நிலையில் இருந்தது.

விளக்கம்[தொகு]

சுமார் 97 அடி (30 மீ) விட்டம் கொண்ட இந்த கோபுரம் எண்கோண வடிவமாக கட்டப்படுள்ளது. இது கட்டப்பட்டபோது, இந்த கோபுரம் சீனாவின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது. ஒன்பது அடுக்குகளுடனும், அடுக்குத் தூபிகளின் நடுவில் 184 சுழல் படிக்கட்டுகளுடன் மேல்நோக்கி செல்கிறது. கூரையின் மேற்பகுதி தங்கத்தாலான அன்னாசிப்பழத்தால் குறிக்கப்பட்டது. 1852 ஆம் ஆண்டில் நாஞ்சிங்கிற்கு வந்த ஒரு அமெரிக்க தொண்டு நிறுவனரின் கருத்துப்படி, மேலும் அடுக்குகளைச் சேர்க்க திட்டங்கள் இருந்ததாகத் தெரிகிறது.

பகல் நேரத்தில் சூரியனின் கதிர்களை பிரதிபலிக்கும் வெள்ளை பீங்கான் செங்கற்களால் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இரவில் கோபுரத்தை ஒளிரச் செய்வதற்காக கட்டிடத்திலிருந்து 140 விளக்குகள் தொங்கவிடப்பட்டன. மெருகூட்டல்கள் மற்றும் பீங்கான் மீது வேலை செய்யப்பட்டு, கோபுரத்தின் பக்கங்களில் பச்சை, மஞ்சள், பழுப்பு மற்றும் வெள்ளை வடிவமைப்புகளின் கலவையை உருவாக்கியது, விலங்குகள், பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகள் உட்பட. இந்த கோபுரம் ஏராளமான பௌத்த உருவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nanjing pagoda - Seven wonders of the medieval world". www.unmuseum.org. U.N.Museum. 28 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Thousand-year Porcelain Tower of Nanjing completes renovation". பீப்புள்ஸ் டெய்லி. 2015-12-15. 2017-02-28 அன்று பார்க்கப்பட்டது.
  3. Digital Library for the Decorative Arts and Material Culture
  4. Edward L. Dreyer (2007). Zheng He: China and the Oceans in the Early Ming Dynasty, 1405–1433. New York: Pearson Longman. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780321084439. .
  5. Edward L. Dreyer (2007). Zheng He: China and the Oceans in the Early Ming Dynasty, 1405–1433. New York: Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780321084439. https://archive.org/details/zhenghechinaocea0000drey. .
  6. Jonathan D. Spence. God's Chinese Son, New York 1996
  7. Williams, S. Wells. The Middle Kingdom: a Survey of the Geography, Government, Literature, Social Life, Arts, & History of the Chinese Empire & its Inhabitants, Vol. 1. Scribner (New York), 1904.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Porcelain Pagoda of Nanjing
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 32°4′49.26″N 118°43′48.78″E / 32.0803500°N 118.7302167°E / 32.0803500; 118.7302167