உள்ளடக்கத்துக்குச் செல்

நாசுகா கோடுகள்

ஆள்கூறுகள்: 14°43′00″S 75°08′00″W / 14.71667°S 75.13333°W / -14.71667; -75.13333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
நாசுகா கோடுகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
இவ்வான்வழி ஒளிப்படம் மாரியா இரெயிசே என்பவரால் 1953 இல் எடுக்கப்பட்டது.
வகைகலைபண்பாடு
ஒப்பளவுi, iii, iv
உசாத்துணை700
UNESCO regionஇலத்தீன் அமெரிக்காவும் கரீபியனும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1994 (18-ஆவது தொடர்)

நாசுகா கோடுகள் (Nazca Lines) என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நாசுகா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளன.[1] மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன.[2] இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நாசுகா நாகரிகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது.[3]

அமைவிடம்

[தொகு]

பெரு நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரப்பதம் அதிகம் இல்லாத உயரமான மேட்டுநிலப்பகுதில் உள்ள ஒரு உலர் சமவேளியில் நாசுக்கா நகரத்திற்கும் பாம்பா-டி-குமானா (Pampas de Jumana) என்னும் இடத்தில் அமைந்த பாற்பா ( Palpa) நகரத்திற்கு இடையே ஏறத்தாழ 50 கி.மீ நீளப்பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி பெரு நாட்டின் தலைநகரான இலீமாவில் இருந்து ஏற்றத்தாழ 400 க்.மீ தொலைவில் உள்ளது. மணற்தரையில் வரையப்பட்டுள்ள கோட்டோவியங்கள் ஏறத்தாழ 10 கி.மீ உக்கு 4 கி.மீ நீள அகலப் பரப்பில் அமைந்துள்ளன. நிலவிடக் கூறுகள் 14°43′S 75°08′W. சான் மிகுயேல் டி பாசுக்கானா ( San Miguel de la Pascana) என்னும் ஊருக்கு தெற்கே அமைந்துள்ளது.

நாசுகா கோடுகள்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
"குரங்கு" என்னும் நாசுக்கா கோடுகளை வானில் இருந்து எடுத்த படம்.
அமைவிடம்தென் பெரு, தென் அமெரிக்கா
ஆள்கூறுகள்14°43′S 75°08′W / 14.717°S 75.133°W / -14.717; -75.133
நாசுகா கோடுகள் is located in Peru
நாசுகா கோடுகள்
Location of நாசுகா கோடுகள் in Peru.

சர்ச்சைகள்

[தொகு]

இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.

சித்திரங்கள்

[தொகு]

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும். இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன.[2] இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.

நிழற்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sebastian Dorsch; Jutta Vinzent (2017). SpatioTemporalities on the Line: Representations-Practices-Dynamics. Walter de Gruyter GmbH & Co KG. pp. 97–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-046578-5.
  2. 2.0 2.1 "Nazca Lines" (in en). Guía Go2peru. 2017-02-22 இம் மூலத்தில் இருந்து 2018-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181029152441/https://www.go2peru.com/peru_guide/nazca/nazca_lines.htm. 
  3. Centre, UNESCO World Heritage. "Lines and Geoglyphs of Nasca and Palpa". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசுகா_கோடுகள்&oldid=3528357" இலிருந்து மீள்விக்கப்பட்டது