நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாசி கைதிகள் சிறைச்சாலை -(Nazi Concentration Camps)-இரண்டாம் உலகப்போரின் போது இட்லர் இந்த கைதிகள் சிறைச்சாலைகளை உருவாக்க ஆரம்பித்தார். முதல் முதலில் 1933 ல் ஜெர்மனியில் ரெய்க் ஸ்டாக் தீக்கிரையானபோது நாசிச் சிறைச்சாலை அரசியல் கைதிகள் மற்றும் இராணுவ எதிரிகளை அடைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. அதன் பின் ஜெர்மனியின் பிற இடங்களிலும் இச்சிறைச்சாலைகள்,அரசியல் கைதிகளையும், நீதிமன்ற விசாரணைக்கு ஆட்படுத்தாத கைதிகளையும் அடைக்க உருவாக்கப்பட்டன. இந்த சொல் இரண்டாம் ஆங்கிலோ போயர் போரில் பிடிபட்டவர்களை அடைக்க பிரித்தானிய அரசு அப்போது பிரித்தானிய கைதிகள் சிறைச்சாலை என்று ஒன்றைஉருவாக்கியது. அதைப் பார்த்து இப்பெயர் நாசிக்களால் வைக்கப்பட்டது.

கைதிகள்[தொகு]

ஜெர்மனியின் வெறுக்கத்தக்கவர்கள் என்று குற்றம் சாற்றப்பட்டு, புரட்சி பத்திரிகையாளர்களையும், கம்யூனிஷ்டுகளையும் அடைத்துக் கொடுமைப்படுத்தினர். இதில் பெரும்பான்மையோர் யூதர்கள் மற்றும் சோவியத் இராணுவக் கைதிகள். இச்சிறைச்சாலையின் கீழ் தளத்தில் அனைவரையும் ஒரே இடத்தில் அடைத்தனர். நகரத்தின் மத்தியில் பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாதவாறு இச்சிறைச்சாலைகள் செயல்பட்டன. 1939 வரை 6 கைதிகள் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. டேச்சு (1933) (டேச்சு கைதிகள் சிறைச்சாலை), சாக்சன்அசன் (1936), புச்சன்வால்ட் (1937), புலோசன்பர்க் (1938), மவுத்தாசேன் (1939), ரெவன்ஸ்பிரக் (1939).

அடிமைத்தொழிலாளர்கள்[தொகு]

இங்குள்ள கைதிகளின் பெரும்பாலானவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது அடிமைகளாகவும், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களாகவும், ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதில் உடல் ஊனமுற்றவர்கள்,வேலை செய்ய முடியாதவர்கள், மனநிலைபாதிக்கப்பட்டவர்களை தனியாக வேறு ஒரு இருப்பிடத்திற்கு மாற்றி நச்சு வாயு , மற்றும் டீசல் எஞ்சினிலிருந்து வெளியேறும் நச்சு வாயு (கார்பன் மோனாக்ஸைடு) செலுத்திக் கொல்லப்பட்டனர். (இதை இட்லரின் டி 4 செயல் (T4 Action) என்று குறிப்பிடுகின்றனர்.) ஐரோப்பியா முழுவதும் இந்த சிறைச்சாலைகள் விரிவடைந்தன யூதர்கள் எங்கெங்கிருக்கின்றார்களோ அங்கங்கே திறக்கப்பட்டன. போலந்தை ஜெர்மன் ஆக்கிரமித்தபோது அங்குள்ள யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இம்மாதிரி சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டனர்.

சிறைக்கொடுமைகள்[தொகு]

கைதிகளை அடைத்துவைத்த இரயில் பெட்டி

இந்த சிறைக்கொடுமையில் யூதர்கள் மட்டும் 30 லட்சம் பேர் நச்சு வாயு செலுத்தியும், துப்பாக்கிச்சூட்டினாலும் கொல்லப்பட்டனர் என்று இங்குள்ள தகவல்கள் கூறுகின்றன. கைதிகள் இடநெருக்கடியின் காரணமாக ரயில்கள் மூலம் மாற்றப்பட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். இரயில்களிலேயே பல நாள் உணவு தண்ணீரின்றி தங்கவைக்கப்பட்டனர். பலர் இதன் காரணமாக நீரழிவு நோய், கடுமையான கோடை வெப்பத்தினால் வயிற்றுப்போக்கு, பனிக்கால கடுங்குளிரினால் உறைந்து போதல், போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதில் சுரங்க மற்றும் ரப்பர் தொழிலாளர்களாக பயன் படுத்தபட்டவர்களில் விரைவாக பணிபுரியாதவர்களை நச்சு வாயு செலுத்தி அங்கேயே சாகடிக்கப்பட்டனர். பெண்கைதிகள் தினமும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இழிவுப்படுத்தப்பட்டனர்.

கைதிகள் விடுதலை[தொகு]

1945, கைதிகள் விடுதலை பெற்றபோது, அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் இறந்த கைதிகளின் சடலங்களை பார்வையிடுகிறார்.

இந்த சிறைச்சாலைகள் 1943 முதல் 1945 வரை நடந்த நேசநாட்டுப்படையினரின் தாக்குதலால் இசுசிறைச்சாலைகள் விடுதலையடைந்தது. 1945 ம் ஆண்டு ஐக்கிய ராச்சியப்படைகள் பெர்ஜன் பெல்சன் சிறைச்சாலைக்குச் சென்று 60 ஆயிரம் கைதிகளை உயிருடன் மீட்டது அதில் 10 ஆயிரம் கைதிகள் அதற்கு அடுத்த வாரத்திலேயே டைப்பஸ் என்னும் நோய்பாதிப்பினால் இறந்தனர். ஏற்கனவே இந்த சிறைச்சாலையைப்பற்றிய செய்திகள் பிரித்தானிய உளவுத்துறைக்கு போலந்து நாட்டு ஜான் கார்ஸ்கி மூலம் தகவல் தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.