உள்ளடக்கத்துக்குச் செல்

டேச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேச்சு நகரம்
டேச்சு மாவட்டத்திலுள்ள டேச்சு நகரம்

டேச்சு -Dachau-ஜெர்மனியின்தெற்கு பகுதியில் மேல் பவேரியாமாநிலத்தின் டேச்சு மாவட்டத்திலுள்ள ஒரு தலைமை நகரமாகும். முனீச் நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கு தற்பொழுது 40000 பூர்வீக குடிமக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நகரின் மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க 18 ஆம் நூற்றாண்டின் கோட்டை ஒன்று உள்ளது. டேச்சு நகரம் 8 ஆம் நூற்றாண்டிலேயே நிர்மானிக்கப்பட்டதாக இங்குள்ள வரலாற்றுத்தகவல்கள் கூறுகின்றன. 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பிரபல ஜெர்மனி எழுத்தாளர் லுட்விக் தோமா வாழ்ந்தார். 1933 ல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன் அரசாங்கத்தில் சார்பாக அரசியல் கைதிகள் சிறைச்சாலை நிர்மானிக்கப்பட்டது.இது டேச்சு கைதிகள் சிறைச்சாலை என அழைக்கப்படுகிறது. இது 1945 வரை செயல்பட்டது. இந்த சிறைச்சாலையில் தான் 19,0591 கைதிகள் கொல்லப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேச்சு&oldid=1352287" இலிருந்து மீள்விக்கப்பட்டது