நவீன சாரங்கதரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன சாரங்கதரா
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புமுருகன் டாக்கீஸ்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
எஸ். எஸ். மணி பாகவதர்
எம். எஸ். சுப்பிரமணியம்
ஜி. பட்டு ஐயர்
எஸ். டி. சுப்புலட்சுமி
எஸ். எஸ். மாணிக்கவல்லி
இந்துபாலா
வெளியீடு1936
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவீன சாரங்கதரா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்தையும் பாபநாசம் சிவன் இயற்றியிருந்தார்.[1] பெரும்பாலான பாடல்களை தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். சிவபெருமான் கிருபை வேண்டும், ஞானகுமாரி நடன சிங்காரி, அபராதம் செய்தறியே போன்ற பாடல்கள் அக்காலத்தில் பிரபலமான பாடல்களாக அமைந்தன.

 1. போய் வாரீர் குருவே (ராகம்: சாமா, தாளம்: ஆதி)
 2. காணக்கண் கூசுதடி - கரடிபோல தோணுதே
 3. வானோர்களும் தேடியே தினம் - நாடும் நந்தவனமதில்
 4. எத்தனை அழகு பாரடி (மாயாமாளவகௌளை, ஆதி)
 5. மின்னல் எழிலுடையாள் இவள் (பந்துவராளி, ரூபகம்)
 6. இன்னும் வராததேனோ என்னுயிர்க்கினியன் (நடபைரவி, ஆதி)
 7. எனக்கே தாரமாவாய் ஏந்திழையே (கேதாரம், ஆதி)
 8. என்ன மோசம் எனதரண் (தோடி, ஆதி)
 9. ரதி சுந்தரி கல்யாணி (கல்யாணி, ஆதி)
 10. படத்திலுள்ள வடிவம் அடியாள் (மோகனம், ஆதி)
 11. பெரும்புனை சுருட்டீதே எனது மனம் (பியாகடை, ஆதி)
 12. ஆசைக்குகந்த மன்னவா அதிசுந்தர மிகுந்தவென (கமாஸ், ஆதி)
 13. அறியீரோ அம்மணி நீரும் (சிறீரஞ்சனி, ஆதி)
 14. ஞான குமாரி நடன சிங்காரி (தேவகாந்தாரி, ஆதி)
 15. கூடித்திரிகின்ற ஜோடிப் புறாக்களை
 16. போடன்னா போடா நீ போக்கிரித்தனமா
 17. மடப்பய போலே தடித்தனமாய்
 18. மேக மண்டலம் தான்டிக் கண்ணுக்கும் தெரியாமல் (கானடா, ஆதி)
 19. நீலமுகிலினிடை மறைந்து
 20. சஞ்சலந்தீர்தின்பமுற வெண்புறாவே (குந்தவராளி, மிச்ரசாப்பு)
 21. வாங்க அத்தான் வாங்க
 22. ஆசைக்குகந்த எந்தன் ஆருயிர்க் காதலன் சாரங்கதாரன்
 23. சொல்லும் வார்த்தை தன்னை தள்ளிச் செல்லவேண்டாம் (சாரங்கா, ஆதி)
 24. பரிகாசமா நண்பா (தேவகாந்தாரி, ஆதி)
 25. அன்னையே இதென்ன நீரெனைப்பணிந்த விந்தையே (சிந்துபைரவி, சாப்பு)
 26. தாயே எனக்கு விடை தாரும் என் அம்மணி (காபி, ஆதி)
 27. இருகண் விருந்தே எனது மனம் கோயில்கொண்டாய்
 28. மன்மதன்போலும் பெற்ற மகனிருந்தாலு மன்னை (கரகரப்பிரியா-விருத்தம்)
 29. மாபாவச்செயலே செய்யவு மெனையே (ஆனந்தபைரவி, ஆதி)
 30. என்னுடையவிதி கிணறுவெட்ட வொரு பூதமெழும் (காம்போதி-விருத்தம்)
 31. அபராதமும் செய்தறியேன் மனமறிந்து (ரசாளி, ஆதி)
 32. புலிவாழும் வனமுமிரு நரகும் மேலாம் (கானடா-விருத்தம்)
 33. தகுமா தோழரே தருணம்
 34. என்ன வார்த்தை மொழிந்தாய் என்னையறிந்தும் (மாண்டு, ஆதி)
 35. பேதை மதியினறியாது மறிந்துஞ்செய்த (பூர்விகல்யாணி, ஆதி)
 36. மாயாவிலாசம் நானறியேன் (இந்து காபி, ஆதி)
 37. சிவபெருமான் கிருபை வேண்டும் அவன் (சுருட்டி, ஆதி)
 38. கிருஷ்ணஜீ கிருஷ்ணஜீ கிருஷ்ணஜீ
 39. வயது சென்ற கிழவன் நானே (செஞ்சுருட்டி, ரூபகம்)
 40. மேரே கிரி தர கோபால மேரே
 41. நாளை நம் சாரங்கதரனுக்கு நல்விவாகம் (இந்து பீம்பிளாசு, ஆதி)

மேற்கோள்கள்[தொகு]

 1. நவீன சாரங்கதரா பாட்டுப் புத்தகம். இலங்கை: சிலோன் பிரிண்டர்ஸ், பார்சன்ஸ் வீதி, கொழும்பு. 1936. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_சாரங்கதரா&oldid=3713914" இருந்து மீள்விக்கப்பட்டது