நயோமி ஒசாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நயோமி ஒசாகா ({{Nihongo|Naomi Osaka|大坂 なおみ Japanese pronunciation: [o̞ːsäkä näo̞mʲi]) (பிறப்பு அக்டோபர் 16, 1997) ஒரு சப்பானிய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இவர் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியவர் ஆவார். மகளிர் டென்னிஸ் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் நிலையைப் பிடித்தவரும், ஒற்றையர் மகளிர் பிரிவில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த முதல் ஆசிய வீராங்கனையும் ஆவார். இவர் மகளிர் டென்னிஸ் சங்கத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் ஐந்தில் வாகை சூடியுள்ளார். இவற்றில் பெருவெற்றித் தொடர் போட்டியும் உள்ளடக்கம் ஆகும்.

ஒசாகா எயிட்டிய வம்சத்தைச் சார்ந்த தந்தை மற்றும் சப்பானிய தாய்க்கும் பிறந்தார். இவர் தனது மூன்றாவது வயதில் இருந்து ஐக்கிய அமெரிக்க நாட்டில் வவளர்ந்தார். 2014 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டி வாகையாளர் சமந்தா ஸ்டோசரைத் தோற்கடித்தபோது தனது பதினாறாவது வயதில் முக்கியத்துவம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் தனது முதல் மகளிர் டென்னிசு சங்கத்தால் சப்பானில் நடத்தப்பட்ட டோராய் பான் பசிபிக் திறந்த போட்டிகளின் இறுதிப்போட்டியை அடைந்தார். இதன் மூலமாக இவர் மகளிர் டென்னிசு சங்கத்தால் அளிக்கப்படும் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 நபர்களுக்குள் இடம் பிடித்தார். ஒசாக்கா 2018 ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசின் மேல்நிலைக்கு முன்னேறினார், அவர் இந்த ஆண்டில் பிஎன்பி பரிபாசு திறந்த போட்டிகளில் தனது முதல் டபிள்யூ.டி.ஏ பட்டத்தை வென்றார். செப்டம்பர் 2018 இல், அவர் ஐக்கிய அமெரிக்க டென்னிசு திறந்த போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 முறை பெருவெற்றித் தொடர் வாகையாளரான செரீனா வில்லியம்சை வென்றார். இதன் மூலம் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) ஒற்றையர் போட்டிகளில் வென்ற முதல் சப்பானியர் ஆனார். அவர் தனது இரண்டாவது பெருவெற்றித் தொடர் வெற்றியை 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டென்னிசு திறந்த போட்டிகளில் வென்றார்.

ஒசாகா தனது பல இன பின்னணி மற்றும் அவரது கூச்ச சுபாவம் மற்றும் நேர்மையான ஆளுமைக்கு பெயர் பெற்றவர். பெருவெற்றித்தொடர் ஒற்றையர் வாகையாளரானபின் அவரது மாறுபட்ட பின்னணி மற்றும் தகுதியுடன், அவர் உலகின் மிகவும் சந்தைப்படுத்தக்கூடிய பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார், 2019 ஆம் ஆண்டில் விளம்பரம் மூலம் பெற்ற ஒப்பு வருமானத்தில் செரீனா வில்லியம்சுக்குப் பிறகான இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் இவர் மட்டுமே. விளையாட்டுக் களத்தில் ஒசாகா மிகவும் ஆக்ரோசமான வீச்சினை செய்பவர் ஆவார். இவரது வீச்சின் வேகம் (மணிக்கு 125 மைல்கள் அல்லது மணிக்கு 200 கிலோமீட்டர்) எட்டக்கூடியது ஆகும்.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

நயோமி ஒசாகா 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் சப்பானில் டமாகி ஒசாகா மற்றும் லியோனார்டு பிரான்கோய்சு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1] அவரது தாயார் சப்பானின் ஹொக்கைடோவைச் சார்ந்தவர். தந்தையார் எயிட்டியின் சாக்மேலைச் சார்ந்தவர். மரி ஒசாகா என்ற மூத்த சகோதரி இவருக்குண்டு. அவரும் தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரண்டு மகள்களுக்கும் தாயாரின் பெயரானது சப்பானில் வாழ்ந்த காலத்தில் சில நடைமுறகை் காரணங்களுக்காக வழங்கப்பட்டது. ஒசாகாவின் தந்தை லியோனார்டு நியூயார்க்கில் ஒரு கல்லூரி மாணவராக இருந்த போது ஹொக்கைடோவிற்கு வந்திருந்த போது ஒசாகாவின் தாயாரைச் சந்தித்துள்ளார்.[2][3]

ஒசாகா மூன்று வயதாக இருந்த பொழுது அவரது குடும்பம் சப்பானிலிருந்து நியூயார்க்கில் உள்ள வேலி இசுட்ரீம் என்ற கிராமத்திற்குத் தன் பெற்றோருடன் வசிப்பதற்காக இடம் பெயர்ந்தார். 1999 ஆம் ஆண்டில் வில்லியம் சகோதரிகள் பிரெஞ்சு டென்னிசு திறந்த போட்டிகளில் மோதிக்கொண்டதைப் பார்த்த போது தனது மகள்களையும் அவ்வாறு டென்னிசு விளையாட்டினைப் பயிற்றுவிக்க ஊக்கமூட்டப்பட்டார். தனக்கு டென்னிசு வீரராக இருந்த குறைந்த அனுபவத்தின் காரணமாக ரிச்சர்ட் வில்லியம்சு என்ற டென்னிசு பயிற்சியாளரிடம் தனது மகள்களைப் பயிற்றுவிக்க உதவி கேட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Naomi Osaka". பார்த்த நாள் November 3, 2018.
  2. Larmer, Brook (August 23, 2018). "Naomi Osaka's Breakthrough Game". The New York Times. https://www.nytimes.com/2018/08/23/magazine/naomi-osakas-breakthrough-game.html. 
  3. "Japanese, Haitian, and now a Grand Slam winner: Naomi Osaka's historic journey to the U.S. Open" (September 10, 2018). பார்த்த நாள் September 11, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயோமி_ஒசாகா&oldid=2867487" இருந்து மீள்விக்கப்பட்டது