கருப்பர் உயிரும் உயிரே
உருவாக்கம் | சூலை 13, 2013 |
---|---|
நிறுவனர்கள் |
|
வகை | சமூக இயக்கம் |
தலைமையகம் |
|
முக்கிய நபர்கள் | ஷான் கிங் டீரே மேக்கின்சன் ஜானிட்டா எல்சி |
வலைத்தளம் | BlackLivesMatter.com |
Black Lives Matter (BLM) ( தமிழில் "கருப்பர் உயிரும் உயிரே" அல்லது "கறுப்பர் உயிரும் உயிரே" (க. உ. உ.)) என்பது கருப்பர்களைக் குறிவைத்த வன்முறை மற்றும் அமைப்பிய இனப்பாகுபாடுக்கு எதிராக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய பன்னாட்டுச் செயற்பாட்டு இயக்கம் ஆகும். க. உ. உ. கருப்பர்கள் காவல்துறையால் கொல்லப்படுவது குறித்தும், இன அடையாளப்படுத்துதல், காவல்துறைக் கொடூரம், ஐக்கிய அமெரிக்க குற்றவியல் நீதி அமைப்பில் இனச் சமத்துவமின்மை குறித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.[1]
2013 இல் ஆப்பிரிக்க அமெரிக்க பள்ளி மாணவரான டிரய்வான் மார்டின் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜார்ஜ் சிம்மர்மேன் விடுவிக்கப்பட்டதை அடுத்து, #BlackLivesMatter என்ற சமூக ஊடக கொத்துக்குறியை (hashtag) இந்த இயக்கம் தொடக்கியது. 2014 இல் காவல்துறை அத்துமீறலால் மைக்கேல் பிரௌன், எரிக் கார்னர் ஆகிய இரு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உயிர் இழந்தனர்.[2][3] அன்று முதல், காவல்துறை செயற்பாடுகளாலோ அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் போதோ எண்ணற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இறந்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2015 கோடைக் காலத்தில், கருப்பர் உயிரும் உயிரே செயற்பாட்டாளர்கள் 2016 ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஈடுபாடு காட்டினார்கள்.[4] முதன்முதலில் '''#BlackLivesMatter''' என்ற அறைகூவலை முன்னெடுத்த அலீசியா கர்சா, பத்ரிசே கலர்ஸ், ஓப்பல் டொமட்டி ஆகியோர், 2014 தொடங்கி 2016க்குள் தங்கள் திட்டத்தை முப்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் கிளைகளைக் கொண்ட நாடு தழுவிய இயக்கமாக மாற்றினார்கள்.[5] எனினும், ஒட்டு மொத்த கருப்பர் உயிரும் உயிரே இயக்கமானது, எந்த விதமான அதிகார அடுக்குகளையும் கொண்டிராமல், குவியமற்ற அமைப்புமுறையாகத் திகழ்கிறது.[6]
இந்த இயக்கம் பலதரப்பட்ட எதிர்வினைகளைக் கண்டது. இந்த இயக்கம் குறித்த ஐக்கிய அமெரிக்க மக்களின் கண்ணோட்டம் அவர்களது இனக்குழுவைப் பொருத்து பெரிதும் மாறுபட்டது.[7] "அனைத்து உயிரும் உயிரே" என்று கூட புதிதாக ஓர் அறைகூவல் தோன்றியது. எனினும், இது கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் விடுக்கும் செய்தியைப் பொருட்படுத்தாமம் தவறாகப் புரிந்து கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.[8] பெர்குசனில் இரு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நீல உயிரும் உயிரே என்ற குறியீட்டைக் காவலர்களின் ஆதரவாளர்கள் உருவாக்கினர்.[9] சில கருப்பின குடிமை உரிமைத் தலைவர்கள் இந்த இயக்கத்தினரின் உத்திகளோடு உடன்படவில்லை.[10][11]
வியூகங்களும் உத்திகளும்
[தொகு]தொடக்கத்தில், கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் சமூக ஊடகங்கள், அவற்றில் குறியீடுகள் பயன்பாடு வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை விரைந்து ஈர்த்தனர்.[12] அன்று முதல் பல்வேறு வகையான உத்திகளைப் பின்பற்றி வருகிறார்கள்.[13]
இணையமும் சமூக ஊடகங்களும்
[தொகு]2014 இல், அமெரிக்க வட்டார வழக்குக் கழகம் #BlackLivesMatter என்பதை அந்த ஆண்டின் சொல்லாக அறிவித்தது.[14][15] யெஸ்! மேகசின் #BlackLivesMatter என்பதை 2014 இல் உலகை மாற்றிய 12 குறியீடுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுத்தது.[16] முகநூல், டுவிட்டர் போன்ற தகவல் தொடர்பாடல் நுட்பங்கள் மூலம் பரவிய மீளிகள் இணையத்துக்கு வெளியேயும் ஆதரவைப் பெற்றுத் தந்தன.[17] எனினும், இந்த இயக்கத்தோடு முரண்படும் நீல உயிரும் உயிரே போன்ற இயக்கங்களும் மீளிகளைப் பயன்படுத்தி விமர்சனங்களையும் நையாண்டிகளையும் பரப்பினர்.[18]
செப்டம்பர் 2016 நிலவரப்படி "Black Lives Matter" என்னும் குறியீடு 30 மில்லியன் முறைக்கும் மேல் டுவிட்டரில் பதிவாக இருந்தது.[19] கரும் டுவிட்டர் என்ற பண்பாட்டு அடையாளத்தோடு இணையத்தில் முனைப்பாக இயங்கும் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கம் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்த்தனர். இந்த இயக்கத்தின் வீச்சை இணையப் பயனர்களுக்குத் தெரிவிக்கவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இணைந்து போராடவும் #BlackLivesMatter என்ற குறீயிடு பெரும் பங்கு ஆற்றியது.[20] ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர். கதீஜா வைட், கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் பல்கலைக்கழக அளவில் கருப்பின மாணவர் இயக்கங்களைத் தோற்றுவிக்கும் புதிய அலையைக் கொணர்ந்திருக்கிறது என்று கூறுகிறார். காவலர் அத்துமீறல்கள் நிகழும் போது அருகில் உள்ளவர்கள் மிக இலகுவாக தங்கள் திறன்பேசிகளில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர முடிவது உலகெங்கும் இந்த இயக்கத்துக்கான ஆதரவைப் பெற்றுத் தருகிறது.[21]
களப் போராட்டங்கள்
[தொகு]க. உ. உ. பொதுவாக களப் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் இது குறித்து ஒரு நிலைப்பாடு எடுக்கத் தூண்டுகிறது.[22] ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மரணப் போராட்டங்கள் என்று பல்வேறு களப்போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.[23] இவ்வாறு கூடும் போது பல்வேறு அரசியல் முழக்கங்களை எழுப்புகிறார்கள். "கருப்பர் உயிரும் உயிரே", "கைகளை உயர்த்து, சுடாதே"[24], "எனக்கு மூச்சு முட்டுகிறது"[25][26] (எரிக் கார்னரின் இறப்பைக் குறிக்கிறது), "வெள்ளையின அமைதியே வன்முறை தான்",[27] "நீதி இல்லை, அமைதி இல்லை",[28][29] "அடுத்து என் மகனா?",[30] போன்றவை அத்தகைய சில முழக்கங்கள் ஆகும்.
ஊடகங்கள்
[தொகு]கெண்டிரிக் லமார் எழுதிய "ஆல்ரைட்" போன்ற பாடல்கள் ஆர்ப்பாட்டங்களின் போது மக்களை ஒன்று திரட்டும் முழக்கங்களாகப் பயன்படுகின்றன.[31] Bars4Justice, Stay Woke: The Black Lives Matter Movement ஆகிய ஆவணப்படங்கள் இந்த இயக்கத்தைப் பேசு பொருளாகக் கொண்டிருந்தன.[32][33]
மேற்கோள்கள்
[தொகு]Lim, Naomi (July 11, 2016). "Rudy Giuliani: Black Lives Matter 'inherently racist'". CNN Politics. பார்க்கப்பட்ட நாள் October 26, 2016.
- ↑ Friedersdorf, Conor. "Distinguishing Between Antifa, ...." The Atlantic. August 31, 2017. August 31, 2017.
- ↑ Day, Elizabeth (July 19, 2015). "#BlackLivesMatter: the birth of a new civil rights movement". The Guardian. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Luibrand, Shannon (August 7, 2015). "Black Lives Matter: How the events in Ferguson sparked a movement in America". CBS News. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Eligon, John (November 18, 2015). "One Slogan, Many Methods: Black Lives Matter Enters Politics". The New York Times. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Cullors-Brignac, Patrisse Marie (February 23, 2016). "We didn't start a movement. We started a network". மீடியம். பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Collins, Ben; Mak, Tim (August 15, 2015). "Who Really Runs #BlackLivesMatter?". The Daily Beast. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ "PBS NewsHour/Marist Poll Summary of National Findings" (PDF). Marist College Institute for Public Opinion. September 2015. பார்க்கப்பட்ட நாள் July 14, 2016.
- ↑ Townes, Carimah. "Obama Explains The Problem With 'All Lives Matter'". think progress. பார்க்கப்பட்ட நாள் August 6, 2016.
- ↑ "'Blue Lives Matter' trends after officers shot". BBC. http://www.bbc.com/news/blogs-trending-31853299. பார்த்த நாள்: July 27, 2015.
- ↑ Jennings, Angel. "Longtime L.A. civil rights leaders dismayed by in-your-face tactics of new crop of activists". Los Angeles Times.
- ↑ Reynolds, Barbara (August 24, 2015). "I was a civil rights activist in the 1960s. But it's hard for me to get behind Black Lives Matter.". The Washington Post. https://www.washingtonpost.com/posteverything/wp/2015/08/24/i-was-a-civil-rights-activist-in-the-1960s-but-its-hard-for-me-to-get-behind-black-lives-matter. பார்த்த நாள்: September 17, 2015.
- ↑ Ruffin II, Herbert G. "Black Lives Matter: The Growth of a New Social Justice Movement". [BlackPast.org]. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ McKitterick, Molly (August 12, 2015). "Frustration Lies Behind 'Black Lives Matter'". Voice of America. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ R.L.G. (January 15, 2015). "Johnson: Words of the year (#BlackLivesMatter)". The Economist. https://www.economist.com/blogs/prospero/2015/01/johnson-words-year-0. பார்த்த நாள்: December 18, 2016.
- ↑ McCulloch, Gretchen (January 29, 2015). "Is a hashtag a word? The case of #BlackLivesMatter". Slate. http://www.slate.com/blogs/lexicon_valley/2015/01/29/is_a_hashtag_a_word_the_case_of_blacklivesmatter.html. பார்த்த நாள்: December 18, 2016.
- ↑ Weedston, Lindsey (December 19, 2014). "12 Hashtags That Changed the World in 2014". Yes! (U.S. magazine). http://www.yesmagazine.org/people-power/12-hashtags-that-changed-the-world-in-2014. பார்த்த நாள்: October 24, 2015.
- ↑ Carty, Victoria (2015). Social Movements and New Technology. Boulder, Colo.: Westview Press. pp. 19–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-4586-4.
- ↑ Jaeger, Kyle (July 18, 2016). "3 Reasons This Anti-Black Lives Matter Meme Is Totally Wrong". பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Wortham, Jenna (September 2016). "Black Tweets Matter". Smithsonian (magazine). பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Mina, An Xiao (June 30, 2015). "An Activism of Affirmation: On Artists, the Internet, and Social Movements". Walker Art Center. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ White, Khadijah (Summer 2016). "Black Lives on Campuses Matter: The Rise of the New Black Student Movement". Soundings (journal) (63): 86–97. https://www.lwbooks.co.uk/soundings/63/black-lives-matter. பார்த்த நாள்: December 18, 2016.
- ↑ "Tactics of Black Lives Matter". IN Close. No. 216. அணுகப்பட்டது December 18, 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-02. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
- ↑ "'Black Lives Matter' builds power through protest". The Rachel Maddow Show. August 10, 2015. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ "Department of Justice Report Regarding the Criminal Investigation into the Shooting Death of Michael Brown by Ferguson, Missouri Police Officer Darren Wilson" (PDF). U.S. Department of Justice. March 4, 2015. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Kim, Grace Ji-Sun; Jackson, Jesse (December 18, 2014). "'I Can't Breathe': Eric Garner's Last Words Symbolize Our Predicament". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் November 18, 2015.
- ↑ Zimmer, Ben (December 15, 2014). "The Linguistic Power of the Protest Phrase 'I Can't Breathe'". Wired. பார்க்கப்பட்ட நாள் November 18, 2015.
- ↑ Phillip, Abby (December 11, 2014). "Protesting racial injustice while white". The Washington Post. https://www.washingtonpost.com/news/post-nation/wp/2014/12/11/protesting-racial-injustice-while-white. பார்த்த நாள்: November 18, 2015.
- ↑ Ford, Glen (November 10, 2015). "Tamir Rice and the Meaning of 'No Justice – No Peace'". Black Agenda Report. பார்க்கப்பட்ட நாள் November 18, 2015.
- ↑ Palmer, Nathan (August 19, 2015). "'No Justice, No Peace': Black Lives Matter & Bernie Sanders". Sociology in Focus. Archived from the original on ஜனவரி 28, 2017. பார்க்கப்பட்ட நாள் November 18, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Fretland, Katie; Connolly, Daniel (July 8, 2016). "Protest against police violence, vigil for reconciliation held in Memphis". The Commercial Appeal. http://www.commercialappeal.com/news/protest-against-police-violence-begins-in-south-memphis-372841dd-ddf7-69a3-e053-0100007f2095-386078911.html. பார்த்த நாள்: July 11, 2016.
- ↑ Harris, Aisha (August 3, 2015). "Has Kendrick Lamar Recorded the New Black National Anthem?". Slate. http://www.slate.com/articles/arts/culturebox/2015/08/black_lives_matter_protesters_chant_kendrick_lamar_s_alright_what_makes.html. பார்த்த நாள்: May 6, 2016.
- ↑ Workneh, Lilly (May 16, 2016). "Jesse Williams Wants You To 'Stay Woke' In New Film On Black Lives Matter". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.
- ↑ Akindele, Toni (May 16, 2016). "Jesse Williams Chronicles 'Black Lives Matter' Movement in Powerful Documentary". Essence. பார்க்கப்பட்ட நாள் December 18, 2016.