நடாலியா போலோவின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடாலியா போலோவின்கா
தாய்மொழியில் பெயர்Ната́лія Полови́нка
பிறப்புநடாலியா யுகிமிவ்னா பொலோவின்கா
27 சூலை 1965 (1965-07-27) (அகவை 58)
ஓல்கோபில், உக்ரைன் சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்
(தற்போதைய உக்ரைன்)
படித்த கல்வி நிறுவனங்கள்லிவிவ் தேசிய இசை அகாதமி
பணிநடிகை, பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது

நடாலியா யுகிமிவ்னா பொலோவின்கா (Nataliya Yukhymivna Polovynka[a]) (பிறப்பு 27 சூலை 1965) என்பவர் ஒரு உக்ரேனிய சோப்ரானோ பாடகர், நாடக மற்றும் திரைப்பட நடிகை, கல்வியாளர் மற்றும் நாடக இயக்குநர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு ஷெவ்சென்கோ தேசிய பரிசைப் பெற்றார்.[1] இவர் எல்விவ் நாடக மையமான "வேர்ட் அண்ட் வாய்ஸ்" இன் நிறுவனர் மற்றும் தலைவர்.[2] இவர் பாரம்பரிய இசை, உக்ரைனின் பழைய ஆன்மீக மெட்டுக்கள் மற்றும் பாரம்பரிய உக்ரேனிய மெல்லிசையை வாசிக்கிறார்.[1]

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இவர் 1965 சூலை 27 அன்று உக்ரேனிய சிற்றூரான ஓல்கோபில்லில் பிறந்தார்.[3][4] நடாலியா 1980 முதல் 1984 வரை மைக்கோலா லியோன்டோவிச் வின்னிட்சியா இசைப் பள்ளிக்குச் சென்றார். பின்னர் 1984 முதல் 1989 வரை மைகோலா லைசென்கோ லிவிவ் தேசிய இசை அகாதமியில் பேராசிரியர் மரியா டர்னவெட்ஸ்காவுடன் பியானோ வகுப்புகளை எடுத்தார்.[4] பாண்டிடெராவில், 1991 இல் இவர் ஜெர்சி க்ரோடோவ்ஸ்கி சர்வதேச கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்.[1][5]

தொழில்[தொகு]

நடாலியா "ஸ்லோவோ ஐ ஹோலோஸ்" (லிவீவ்) நாடக மையத்தின் இயக்குநராக உள்ளார். மேலும் ஃபிலிம்ஸ்பிரதர்ஸ் திரைப்படங்களின் பாகங்களில் நடித்துள்ளார். இவர் சர்வதேச ஜெர்சி கிரோடோவ்ஸ்கி சர்வதேச கல்வி நிறுவனம், லிவிவ் மற்றும் கிய்வ் பில்ஹார்மோனிக் சிம்பொனி இசைக்குழுக்கள், லிவிவ் ஓபராவின் சிம்பொனிக் இசைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்..[1]

2007 மற்றும் 2008 இல் ஜெர்சி கிரோடோவ்ஸ்கி கல்வி நிறுவனத்தின் அட்லியர் கல்வித் திட்டத்தில் கற்பித்தார். 1988 முதல் 2006 வரை லிவிவில் உள்ள லெஸ் குர்பாஸ் அகடாமிக் நாடக அரங்கின் நடிகை மற்றும் இசை இயக்குராகவும் இருந்தார். இவர் பாடல் நாடகக் குழுவை உருவாக்கினார், அதை இவர் 2003 முதல் 2010 வரை வழிநடத்தினார் (மஜ்ஸ்டெர்னியா பிஸ்னி). இவர் 2010 இல் எல்விவ் நகராட்சி நாடக அரங்கம், கலை, ஆய்வு மற்றும் கல்வி மையமான "வேர்ட் அண்ட் வாய்ஸ்" ஐ நிறுவினார்.[2] இவர் 2015 முதல் தரெவோ சர்வதேச நாடக விழாவின் ஆசிரியர் மற்றும் இயக்குநராக இருந்து வருகிறார்.[5]

நடாலியா பல இசை மற்றும் நாடகங்களை எழுதியுள்ளார். அவை பின்வருமாறு:[5]

  • ІРМОС, давні духовні наспіви України (2012)[6]
  • Пісні Вітру (2008)[7]
  • Квітка- невіста (2001)[8][9]
  • Вість літа (2001)[9]
  • По Рождеству (2009)[10]
  • Земля – Пісня (2023)[11]
  • Сад Божественних Пісень (2022)[12]

பிற படைப்புகள்[தொகு]

நடாலியா கொலம்பியா பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் (ஐக்கிய இராச்சியம்), வேல்ஸ் பல்கலைக்கழகம் (ஐக்கிய இராச்சியம்), மற்றும் ஜெர்சி கிரோடோவ்ஸ்கி சர்வதேச கல்வி நிறுவனம் (போலந்து) ஆகியவற்றில் கற்பித்துள்ளார்.[1]

விருதுகளும் அங்கீகாரங்களும்[தொகு]

நடாலியா ஷெவ்செங்கோ தேசிய பரிசு மற்றும் பல சர்வதேச திரைப்பட மற்றும் நாடக விழாக்களில் பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான "பிரதர்ஸ்: தி ஃபைனல் கன்ஃபெஷன்" திரைப்படத்தில் இவரது நடிப்பிற்காக, சிறந்த நடிகைக்கான சில்வர் ஜார்ஜ் விருதைப் பெற்றார். உக்ரைனுடனான உருசியாவின் 2014 ஆண்டைய மோதலின்போது நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட "மதர் ஆஃப் அப்போஸ்தலர்ஸ்" என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பிற்காக அமெரிக்கா, கனடா, இத்தாலி, உக்ரைன் போன்ற நாடுகளில் நடந்த முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. உக்ரைனியன்: Наталія Юхимівна Половинка

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Nataliya Polovynka – voice – Lviv National Philharmonic". philharmonia.lviv.ua (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  2. 2.0 2.1 "Natalia Polovynka". Instytut im. Jerzego Grotowskiego (in போலிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  3. "Наталка Половинка". Кино-Театр.Ру. 2014-06-29. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  4. 4.0 4.1 "Половинка Наталія Юхимівна | Комітет з Національної премії України імені Тараса Шевченка". knpu.gov.ua. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  5. 5.0 5.1 5.2 "Наталія Половинка". Кращий Художник (in உக்ரைனியன்). 2021-01-15. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  6. "Наталія Половинка: "Ми губимо передання" – РІСУ". Релігійно-інформаційна служба України (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  7. ""Аудіодиск "Пісні вітру" Наталка Половинкиа"". Інтернет-магазин книг Наш Формат (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
  8. ""Квітка-Невіста" – "Word and voice" Theatre". TicketClub.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  9. 9.0 9.1 "Світ духовний. І Наталія Половинка — у ньому". umoloda.kyiv.ua (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  10. ""Аудіодиск "По Рождеству" Наталя Половинка"". Інтернет-магазин книг Наш Формат (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  11. "Bouquet Kyiv Stage | Концерт-вистава Земля-Пісня". bouquetstage.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  12. "Український культурний фонд". ucf.in.ua (in ua). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடாலியா_போலோவின்கா&oldid=3909777" இலிருந்து மீள்விக்கப்பட்டது