நசுமா இத்ரீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசுமா அப்துல்லா இத்ரீசு (2013)

நசுமா அப்துல்லா இத்ரீசு (Najma Idrees) (அரபு: نجمة عبدالله إدريس; பிறப்பு : 25 டிசம்பர் 1952) ஒரு குவைத் நாட்டின் கவிஞர், கட்டுரையாளர் மற்றும் அறிஞர் ஆவார்.

சுயசரிதை[தொகு]

இத்ரீசு 1952 ஆம் ஆண்டு குவைத்து நாட்டில் பிறந்தார். 1976 ஆம் ஆண்டு குவைத்து பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியப் பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியிலிருந்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். அதில் இவரது ஆய்வுக் கட்டுரை 'நவீன அரபுக் கவிதைகளில் மரணம் மற்றும் அதன் வளர்ச்சி' (அரபு: مفهوم الموت وتطوره في الشعر العريث الحيد) என்ற தலைப்பில் இருந்தது.

இத்ரீசு தனது ஆரம்ப பல்கலைக்கழக ஆண்டுகளில் இருந்து ஒரு கவிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் எழுதத் தொடங்கினார். மேலும் குவைத்து எழுத்தாளர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்ட அல்-பயான் இதழில் தனது ஆரம்பகால படைப்புகளை வெளியிட்டார். [1]

பல்வேறு அரபு நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரம், கலை மற்றும் இலக்கியத்திற்கான தேசிய கவுன்சில் [2] நடத்தும் கலாச்சார வாரங்களில் அடிக்கடி பங்கேற்பவர் ஆவார்.

அல்-சரிடா செய்தித்தாளின் வாராந்திர பத்திகள், [3] மாத இதழ்களுக்கான கட்டுரைகள் மற்றும் உள்ளூர் பத்திரிக்கை மற்றும் வானொலி நேர்காணல்களில் திறந்த விவாதங்களும் அவரது பங்களிப்புகளில் அடங்கும்.

கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

புத்தகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Al-Bayan Magazine by Kuwaiti Writers Association http://alrabeta.net/?page_id=590
  2. NCCAL description http://zayedaward.ae/portal/en/readwinner.aspx?id=67 பரணிடப்பட்டது 2019-09-20 at the வந்தவழி இயந்திரம்
  3. Al-Jarida weekly column http://www.aljarida.com/editors/index/209/ பரணிடப்பட்டது 2015-02-10 at the வந்தவழி இயந்திரம்
  4. Dr. Najma Idrees was presented with the Arab Women Award (Kuwait Awards) in the field of literature in 2013. http://www.arabwomanawards.com/kuwait-2013.html பரணிடப்பட்டது 2015-02-10 at the வந்தவழி இயந்திரம்
  5. "كونا :: الشيخ احمد الفهد يعتمد اسماء الفائزين بجوائز الدولة التقديرية والتشجيعية 22/11/2002".
  6. Preview of 'My Language Fractures.. I Grow' (Arabic: تتكسر لغتي انمو: سيرة شعرية وشواهد) https://books.google.com/books?id=B7bYKvnuZfwC&dq=نجمة%20ادريس&pg=PP1
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசுமா_இத்ரீசு&oldid=3754199" இலிருந்து மீள்விக்கப்பட்டது