எழுத்தாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எழுத்தாளர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

எழுத்தாளர் என்பவர் கதை, கட்டுரை, திறனாய்வு, விளம்பரம் உள்ளிட்ட எழுத்துப் படைப்புகளை உருவாக்குபவர். அவரது படைப்புகள் இதழ்கள் மற்றும் நூல்கள் மூலமாக வெளியாகும். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களை தொழில் முறை எழுத்தாளர்கள் (Professional Writers), சுதந்திர எழுத்தாளர்கள் (Free - Lance Writers) என இரு வகையாகப் பிரிக்கலாம். தொழில் முறை எழுத்தாளர்கள் இதழ்களில் மாதச் சம்பளத்தில் பணியாற்றுபவர்கள். இவர்கள் எழுதுவதையே தொழிலாகக் கொண்டவர்கள். சுதந்திர எழுத்தாளர்கள் எந்த ஒரு இதழுடனும் நேரிடையாகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், இதழ்களிடம் மாதச் சம்பளம் பெறும் பணியிலில்லாமல் விரும்புகின்ற அனைத்து இதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தாளர்&oldid=2686915" இருந்து மீள்விக்கப்பட்டது