நசுகா கோடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 14°43′00″S 75°08′00″W / 14.71667°S 75.13333°W / -14.71667; -75.13333

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
நசுகா கோடுகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
இவ்வான்வழி ஒளிப்படம் மாரியா ரெயிசே என்பவரால் 1953 இல் எடுக்கப்பட்டது.
வகைகலாசாரம்
ஒப்பளவுi, iii, iv
உசாத்துணை700
UNESCO regionஇலத்தீன் அமெரிக்காவும் கரீபியனும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1994 (18ஆவது தொடர்)

நசுகா கோடுகள் (Nazca Lines) என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நசுகா என்னுமிடத்தில் அமைந்த, மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். சுமார் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன.

இவை ஆறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வசித்த நசுகா நாகரிகத்தவரின் செயல் என்று நம்பப்படுகிறது.

சர்ச்சைகள்[தொகு]

இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.

சித்திரங்கள்[தொகு]

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.

இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.


நிழற்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசுகா_கோடுகள்&oldid=2550019" இருந்து மீள்விக்கப்பட்டது