நங்கநல்லூர் இலட்சுமி அயவதனப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு இலட்சுமி அயவதனப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:2 வது , பிரதான சாலை, சென்னை, நங்கநல்லூர், தாம்பரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலந்தூர்
மக்களவைத் தொகுதி:ஸ்ரீபெரும்புதூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ லஷ்மி ஹயவதனப் பெருமாள்
தாயார்:மஹாலஷ்மி
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ் வருடப்பிறப்பு, பிரம்மோற்சவம்

நங்கநல்லூர் இலட்சுமி அயவதனப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]


கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஸ்ரீ லஷ்மி ஹயவதனப் பெருமாள், மஹாலஷ்மி சன்னதிகளும், கருடன், தேசிகன், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் பிரம்மோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]