தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
தொழிற் கட்சி Labour Party | |
---|---|
தலைவர் | கீர் இசுட்டார்மர் |
துணைத் தலைவர் | அஞ்செலா ரைனர் |
பொதுச் செயலாளர் | டேவிட் எவான்சு |
பிரபுக்கள் அவைத் தலைவர் | அஞ்செலா சிமித் |
குறிக்கோளுரை | "மாற்றம்" |
தொடக்கம் | 27 பெப்ரவரி 1900 |
தலைமையகம் |
|
இளைஞர் அமைப்பு | இளம் தொழிலாளர் |
உறுப்பினர் (மார்ச் 2024) | ▼ 366,604[3] |
கொள்கை | |
அரசியல் நிலைப்பாடு | மைய-இடது |
பன்னாட்டு சார்பு | முற்போக்குக் கூட்டணி சோசலிசுட் இன்டர்நாசனல் (பார்வையாளர்) |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய சோசலிசுடுகள் கட்சி |
கூட்டுக் கட்சிகள் | கூட்டுறவுக் கட்சி (தொழிலாளர் மற்றும் கூட்டுறவு) |
நிறங்கள் | சிவப்பு |
பண் | "செங்கொடி" |
பகிர்ந்தளிக்கப்பட்ட அல்லது அரைத் தன்னாட்சிக் கிளைகள் |
|
நாடாளுமன்றக் கட்சி | நாடாளுமன்றத் தொழிற் கட்சி |
மக்களவை | 411 / 650 |
பிரபுக்கள் அவை | 172 / 783 |
இசுக்கொட்டிய நாடாளுமன்றம் | 22 / 129 |
உவெல்சு நாடாளுமன்றம் | 30 / 60 |
பிராந்திய நகர முதல்வர்கள் | 11 / 12 |
இலண்டன் பேரவை | 11 / 25 |
இணையதளம் | |
labour |
தொழிற் கட்சி (Labour Party) என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஓர் சமூக-சனநாயக அரசியல் கட்சி ஆகும். இது சமூக சனநாயகவாதிகள், சனநாயக சோசலிசுடுகள், தொழிற்சங்கவாதிகள் ஆகியோரின் ஓர் கூட்டணியாக செயற்படுகிறது.[5] அரசியற் கோட்பாட்டின்படி தொழிற் கட்சி மைய-இடதுசாரிக் கொள்கையுடையது. இது 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, தற்போதைய ஆளும் கட்சியாகும். வாக்குகள், தொகுதிகள் அடிப்படையில், இது மக்களவையில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். 1922 முதல் அனைத்து பொதுத் தேர்தல்களிலும், தொழிற்கட்சி ஆளும் கட்சியாகவோ அல்லது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகவோ இருந்து வருகிறது. இதுவரையில் ஏழு தொழிற்கட்சிப் பிரதமர்களும் பதினான்கு தொழிற்கட்சி அமைச்சரவைகளும் இருந்துள்ளன. கட்சி மாநாட்டுக் காலத்தில் ஆண்டுதோறும் தொழிற் கட்சி தனது கட்சி மாநாட்டை நடத்துவது வழக்கம்.
19 ஆம் நூற்றாண்டின் தொழிற்சங்க இயக்கம் மற்றும் சோசலிசக் கட்சிகளில் இருந்து வளர்ந்து,[6] 1900 ஆம் ஆண்டில் கட்சி உருவாக்கப்பட்டு, 1927 இல் கூட்டுறவுக் கட்சியுடன் கூட்டணியை உருவாக்கியது. 1920களின் முற்பகுதி வரை பழமைவாதக் கட்சியின் ஒரேயொரு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய லிபரல் கட்சியின் இடத்தை தொழிற் கட்சி பிடித்தது.[7] 1920களிலும், 1930களின் முற்பகுதியிலும் சேம்சு ராம்சி மெக்டொனால்டின் கீழ் இரண்டு சிறுபான்மை அரசாங்கங்களை உருவாக்கியது. தொழிற் கட்சி 1940-1945 போர்க்காலக் கூட்டணியில் பணியாற்றியது. அதன் பிறகு கிளமெண்ட் அட்லீயின் தொழிற்கட்சி அரசாங்கம் தேசிய சுகாதார சேவையை நிறுவி, 1945 முதல் 1951 வரை நலன்புரி அரசை விரிவுபடுத்தியது.[8] ஹரோல்ட் வில்சன், சேம்ஸ் காலகன் ஆகியோரின்கீழ், தொழிற்கட்சி மீண்டும் 1964 முதல் 1970 வரையும், பின்னர் 1974 முதல் 1979 வரை ஐக்கிய இராச்சியத்தை ஆண்டது. 1990களில், டோனி பிளேர் தனது புதிய தொழிலாளர் திட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்கட்சியை மைய-அரசியலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கார்டன் பிரவுன் 1997 முதல் 2010 வரையும் பிரதமர்களாக இருந்தனர். கீர் இசுட்டார்மர் தொழிற்கட்சியை மீண்டும் மைய-அரசியலுக்கு அழைத்துச் சென்று 2024 முதல் ஆட்சி செய்து வருகிறார்.
தற்போதைய உவேல்சு நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி மிகப்பெரிய கட்சியாகவும், அரசை அமைத்தை ஒரே கட்சியாகவும் விளங்குகிறது. இசுக்காட்லாந்தில் 2024 பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அதிக இடங்களை வென்றது. தொழிற்கட்சி ஐரோப்பிய சோசலிஸ்டுகள், முற்போக்கு கூட்டணி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது, அத்துடன் சோசலிச அகிலத்தில் பார்வையாளர் நிலையையும் பெற்றுள்ளது. கட்சியில் அரைத் தன்னாட்சி பெற்ற இலண்டன், இசிக்காட்டிய, உவெல்சிய, வடக்கு அயர்லாந்துக் கிளைகள் உள்ளன; இருப்பினும், அது வட அயர்லாந்தில் சமூக சனநாயகத் தொழிலாளர் கட்சியை (SDLP) ஆதரிக்கிறது. மார்ச் 2024 நிலவரப்படி, தொழிற்கட்சி 366,604 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
தொழிற் கட்சிப் பிரதமர்கள்
[தொகு]பெயர் | படம் | பிறந்த நாடு | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
சேம்சு இராம்சே மெக்டொனால்டு | இசுக்காட்லாந்து | 1924; 1929–1931 | |
கிளமெண்ட் அட்லீ | இங்கிலாந்து | 1945–1950; 1950–1951 | |
அரோல்டு வில்சன் | இங்கிலாந்து | 1964–1966; 1966–1970; 1974; 1974–1976 | |
சேம்சு கலகன் | இங்கிலாந்து | 1976–1979 | |
டோனி பிளேர் | இசுக்காட்லாந்து | 1997–2001; 2001–2005; 2005–2007 | |
கார்டன் பிரவுன் | இசுக்காட்லாந்து | 2007–2010 | |
கீர் இசுட்டார்மர் | இங்கிலாந்து | 2024–இன்று |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Shea, Stephen; Buckley, James (8 December 2015). "Corbyn's Labour party set for swanky HQ move". CoStar. Archived from the original on 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
- ↑ "Contact". Labour Party. Archived from the original on 24 September 2020. பார்க்கப்பட்ட நாள் 14 September 2020.
- ↑ Helm, Toby (30 March 2024). "Labour membership falls by 23,000 over Gaza and green policies". The Guardian. https://www.theguardian.com/politics/2024/mar/30/labour-membership-falls-by-23000-over-gaza-and-green-policies.
- ↑ "GBC | Gibraltar Broadcasting Corporation".
- ↑ Worley, Matthew (2009). The Foundations of the British Labour Party: Identities, Cultures and Perspectives, 1900–39. Ashgate Publishing. pp. 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-6731-5 – via கூகுள் புத்தகங்கள்.
- ↑ Martin Pugh, Speak for Britain!: a new history of the Labour Party (1910) pp. 14–50. online
- ↑ Frank Bealey, "The Electoral Arrangement between the Labour Representation Committee and the Liberal Party," Journal of Modern History 28#4 (1956), pp. 353–373 in JSTOR
- ↑ "1945: Churchill loses general election". BBC News. 26 July 1945 இம் மூலத்தில் இருந்து 21 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120821130818/http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/26/newsid_3572000/3572175.stm.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Labour History Group website
- Guardian Unlimited Politics—Special Report: Labour Party
- Labour History Archive and Study Centre holds archives of the National Labour Party
- Catalogue of the Labour Party East Midlands Region archives held at the Modern Records Centre, University of Warwick