பிரபுக்கள் அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின்
ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்களின் அவை
55வது நாடாளுமன்றம்
Crowned portcullis in Pantone 7427 C
வகை
வகை
தலைமை
அவைத்தலைவர் பிரபு
கோமகள் டிசௌசா, இடைநிலை இருக்கையாளர்
செப்டம்பர் 1, 2011 முதல்
ஆளும் கட்சித் தலைவர்
ஓர்போர்டு ஹில் பிரபு, கன்சர்வேட்டிவ்
சனவரி 7, 2013 முதல்
எதிர் கட்சித் தலைவர்
பிளைசுடனின் கோமகள் ரோயல், தொழிற்கட்சி
மே 11, 2010 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்760
(+52 பியர்கள் விடுப்பில் உள்ளனர் அல்லது அமர தகுதியிழந்தவர்கள்)[1]
அரசியல் குழுக்கள்
மேன்மைதாங்கிய அரசியின் அரசு
     கன்சர்வேட்டிவ் கட்சி (213)
     லிபரல் டெமக்கிராட்சு (90)
எதிர்கட்சி
     தொழிற் கட்சி (222)
மற்ற எதிர்கட்சிகள்
     டெமாகிராட்டிக் யூனியனிஸ்ட் கட்சி (4)
     உல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி (3)
     ஐக்கிய இராச்சிய சுயேச்சைக் கட்சி (3)
     பிளைடு சிம்ரு (2)
     இடைநிலை இருக்கையாளர் (178)
    சட்ட பிரபுக்கள் (25)

     Lab Ind (1)
     Con Ind (1)
     Ind Lab (1)
     Ind Lib (1)

     Non-affiliated (17)
சம்பளம்ஆண்டு ஊதியமில்லை, ஆனால் செலவுகள் கொடுக்கப்படும்.
கூடும் இடம்
Wood panelled room with high ceiling containing comfortable red padded benches and large gold throne.
பிரபுக்கள் அவை கூடம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
வெஸ்ட்மின்ஸ்டர்
இலண்டன்
ஐக்கிய இராச்சியம்
வலைத்தளம்
http://www.parliament.uk/lords/

பிரபுக்கள் அவை (House of Lords) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். மற்ற மக்களவை (காமன்சு) போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது.

பிரபுக்கள் அவை மக்களவையினின்றும் முற்றிலும் தனிப்பட்டு இயங்கி அதனுடைய பணியை முழுமையாக்குகிறது; சட்டங்கள் இயற்றவும் அரசுச் செயல்களை கண்காணிக்கவும் பிரபுக்கள் அவைக்கு பொறுப்பு உண்டு.[2] சட்ட முன்வரைவுகளை இரு அவைகளில் எந்த அவையிலும் அறிமுகப்படுத்தலாம்; பிரபுக்கள் அவை உறுப்பினர்களும் அமைச்சரவையில் பங்கேற்கலாம். பிரபுக்கள் அவைக்கு சேவை புரிய, காமன்சு அவையிடமிருந்து தனித்த கட்டமைப்பு, பிரபுக்கள் அவை நூலகம் உட்பட, உள்ளது.

பிரபுக்கள் அவை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை:

  • 2 உறுப்பினர்கள் தங்களுடைய பணிநிமித்தம் நியமிக்கப்படுகின்றனர் - நோர்போக் டியூக் மற்றும் சோல்மோன்டெலி மார்கசு, அவைத்தலைவர் (இருவரும் அரச நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உதவுகின்றனர்).
  • 90 உறுப்பினர்கள் பரம்பரை பியர்கள் - இவர்களது மூதாதையரில் ஒருவர் அவை அங்கத்தினராக இருந்தமையால் உறுப்பினரானவர்.
  • மற்ற உறுப்பினர்கள் வாழ்நாள் உறுப்பினர்கள் - 1958க்கு முன்னதாக இருந்தவர்கள் அல்லது சட்டப் பிரபுக்கள். சட்டப் பிரபுக்கள் என்போர் இங்கிலாந்து மற்றும் வேல்சு உச்ச நீதிமன்றம் இல்லாது பிரபுக்கள் அவை இப்பணியை மேற்கொண்டபோது நியமிக்கப்பட்ட மூத்த நீதியரசர்கள் ஆவர்.
  • இங்கிலாந்து திருச்சபையின் மிக மூத்த இருபத்து ஆறு பேராயர்கள்- இவர்கள் தெய்வநிலை பிரபுக்கள் எனப்படுகின்றனர் (Lords Spiritual).

இடைநடை இருக்கையர்[தொகு]

பிரபுக்கள் அவையில் பல உறுப்பினர்கள் கிராஸ் பென்ச்சர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் அரசுக்கு ஆதரவான அல்லது எதிர்க்கட்சிகளைச் சாராதவர்கள்; அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவைக்கூடத்தில் இவர்களுக்கான இருக்கைகள் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள நடையில் அமைக்கப்பட்டுள்ளதால் இப்பெயர் அமைந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Lords by party and type of peerage". Parliament of the United Kingdom. 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 9 November 2012.
  2. "Quick Guide to the House of Lords" (PDF). Parliament of the United Kingdom. பார்க்கப்பட்ட நாள் 8 November 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுக்கள்_அவை&oldid=3573989" இலிருந்து மீள்விக்கப்பட்டது