தொப்பூர் கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொப்பூர் கணவாய்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி மாவட்டம்

தொப்பூர் கணவாய் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம் தொப்பூர் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

சேலம் மாவட்டத்தை தருமபுரி மாவட்டத்துடன் இணைக்கும் கணவாய்களுள் இதுவும் ஒன்று. மற்றொன்று மஞ்சவாடி கணவாய் ஆகும்.[1]

இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை 7 செல்வதால் தமிழகத்தின் முதன்மையான வணிக வழித்தடமாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இக்கணவாய் வழியாகச் செல்கின்றன.[2] இக்கணவாய் பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு இருபுறமும் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தக் காட்டுப் பகுதியில் குரங்கு, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில், முயல் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ள ன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மஞ்சவாடி கணவாய் அருகே நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு". www.maalaimalar.com. மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.
  2. "நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.29 லட்சத்தில் மின்விளக்கு வசதி". செய்தி. தினகரன். பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "கடும் வறட்சியால் தொப்பூர் கணவாயில் கருகி வரும் மரங்கள்". செய்தி. www.agridoctor.in. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்பூர்_கணவாய்&oldid=3777181" இலிருந்து மீள்விக்கப்பட்டது