தேசிய மருத்துவர்கள் நாள்
சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors' Day) ஆகும். இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை நாளாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இந்நாளைக் கொண்டாடுகின்றன.
மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு
[தொகு]இந்தியா
[தொகு]இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.[2] இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Doctors' Day: Here's what you should know about Dr BC Roy". Firstpost. 1 July 2016. http://www.firstpost.com/india/national-doctors-day-heres-what-you-should-know-about-dr-bc-roy-2866918.html. பார்த்த நாள்: 1 July 2017.
- ↑ Kalra, Dr. R. N. (3 July 2011). "A doctor par excellence" (in en). The Hindu. http://www.thehindu.com/opinion/open-page/a-doctor-par-excellence/article2153732.ece.
- ↑ "Doctors' Day: What is it? Here's why IMA's advisory to its members for healthy living makes sense" (in en). Zee News. 30 June 2017. http://zeenews.india.com/health/doctors-day-what-is-it-heres-why-imas-advisory-to-its-members-for-healthy-living-makes-sense-2019928. பார்த்த நாள்: 1 July 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- History of National Doctors' Day in the United States 2017
- Doctors Day in India 2014 பரணிடப்பட்டது 2017-06-19 at the வந்தவழி இயந்திரம்
- National Doctors' Day in United States 2017
- http://www.doctorsday.org/
- http://www.doctorsday.org/Doctors-Day-History.html
- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267
- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR: பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம்
- http://www.asahq.org/news/doctorsday10.html பரணிடப்பட்டது 2010-04-13 at the வந்தவழி இயந்திரம்
- tr:Tıp Bayramı
- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0 பரணிடப்பட்டது 2011-04-12 at the வந்தவழி இயந்திரம்
- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm
- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011