தெமின்க் கொசு உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெமின்க் கொசு உள்ளான்
Temmincks Stint.jpg
இன்பெருக்க காலத்தில் தெமின்க் கொசு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: இசுகோலோபாசிடே
பேரினம்: கேலிடிரிசு
இனம்: கே. தெமின்க்கீ
இருசொற் பெயரீடு
கேலிடிரிசு தெமின்க்கீ
(லெயிசுலர், 1812)
Calidris temminckii distribution map.png
கே. தெமின்க்கீ பரம்பல்      இனப்பெருக்கமிடம்     குளிர்கால பரவலிடம்
வேறு பெயர்கள் [2]

எரோலியா தெமின்க்கீ

தெமின்க் கொசு உள்ளான் (Calidris temminckii) என்பது ஒரு சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன்  பொதுப் பெயர் மற்றும் லத்தீன் இருசொற் பெயர்  டச்சு இயற்கை ஆர்வலர் கோன்ராடு தெமின்க் என்பாரின் நினைவாக இடப்பட்டுள்ளது. இது மஞ்சக்கால் கொசு உள்ளான் எனவும் அழைக்கப்படுகிறது[3].

உடலமைப்பும் தோற்றமும்[தொகு]

இவற்றின் நீளம் 13.5 - 15 செமீ. ஏறக்குறைய  இதே அளவு உள்ள கொசு உள்ளானை  (Calidris minuta) விட குறுகிய கால்களையும் சற்று  நீண்ட இறக்கைகளையும் கொண்டவை. தெமின்க் உள்ளானின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புற வால் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்; மாறாக கொசு உள்ளானின் கால்கள் கருத்தும் வெளிப்புற வால் இறகுகள் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Calidris temminckii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Calidris temminckii on Avibase
  3. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 91