தென்னல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னல
கிராம ஊராட்சி
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • வகைகிராம ஊராட்சி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்49,214
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்676508
வாகனப் பதிவுKL-65, KL-55

தென்னல (Tennala) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். [1] தென்னல அதன் பண்பாட்டுக்குப் பெயர் பெற்றது. தேசிய நெடுஞ்சாலை (தே.நெ-17) பூக்கிப்பம்பைக் கடந்து செல்கிறது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பரப்பனங்காடி தொடருந்து நிலையம் (12 கிமீ) ஆகும். அருகில் உள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் (23 கி.மீ) ஆகும்.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தென்னலவின் மொத்த மக்கள் தொகை 49,214 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 23,753 என்றும், பெண்களின் எண்ணிக்கை 25,461 என்றும் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

தென்னல கிராமமானது திரூர், தானூர், பரப்பனங்காடி போன்ற நகரங்களின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 பூக்கிப்பரம்பா வழியாக செல்கிறது, அதன் வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12, 29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது.

அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பரப்பனங்காடியில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னல&oldid=3882217" இலிருந்து மீள்விக்கப்பட்டது