தூக்கவெலும்புக்கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூக்கவெலும்புக்கூடு
தூக்கவெலும்புக்கூட்டின் வரைபடம்
இலத்தீன் skeleton appendiculare

தூக்கவெலும்புக் கூடு (appendicular skeleton) மனித உடலில் 126 எலும்புகளைக் கொண்டதாகும். இதனை ஆங்கிலத்தில் பிற்சேர்க்கை எனப்பொருள்படும் அப்பென்டிகுலர் எலும்புத் தொகுதியாக குறிக்கின்றனர். ஓர் பெரிய தொகுதியுடன் இணையும் அங்கமாக தூக்கவெலும்புக்கூடு உள்ளது. இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது.

தூக்கவெலும்புத் தொகுதி குருத்தெலும்புகளிலிருந்து குறுத்தெலும்பக அத்தியாக்கம் என்ற செயல்முறையில் உருவாகின்றன.

தூக்கவெலும்புத் தொகுதியை ஆறு முதன்மை மண்டலங்களாகப் பிரிக்கலாம்:

1) மார்பு வளையம் (4 எலும்புகள்) - இடது, வலது காறை எலும்புகள் (2) மற்றும் தோள்பட்டை எலும்பு (2).

2) புயம்/முன்புயம் (6 எலும்புகள்) - இடது, வலது புயவெலும்பு(2) (புயம்), முழங்கை எலும்பு (2) மற்றும் முன்னங்கை எலும்பு (2) (முன்புயம்).

3) கைகள் (54 எலும்புகள்) - இடது, வலது மணிக்கட்டு எலும்புகள் (16) (மணிக்கட்டு), அனுமணிக்கட்டு எலும்புகள் (10), கீழ் விரல் எலும்புகள் (10), நடு விரல் எலும்புகள் (8), வெளி விரல் எலும்புகள் (10).

4) இடுப்பெலும்பு (2 எலும்புகள்) - இடது, வலது இடுப்பெலும்பு (2) (புடைதாங்கி).

5) தொடையும் காலும் (8 எலும்புகள்) - தொடையெலும்பு (2) (தொடை), கீழ்க்கால் உள்ளெலும்பு (2), முழங்காற்சில்லு (2) (முழங்கால்), மற்றும் கீழ்க்கால் வெளியெலும்பு (2) (கால்).

6) காலடி மற்றும் கணுக்கால் (52 எலும்புகள்) - கணுக்கால் எலும்பு (14) (கணுக்கால்), அனுகணுக்கால் எலும்புகள் (10), கீழ் விரல் எலும்புகள் (10), நடு விரல் எலும்புகள் (8), வெளி விரல் எலும்புகள் (10).

உடற்கூற்றியல் வேறுபாடுகளால் எலும்புக்கூட்டில் பல கூடுதல் எலும்புகள் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தூக்கவெலும்புக் கூட்டின் 126 எலும்புகளும் அச்செலும்புக் கூட்டின் 80 எலும்புகளும் இணைந்து மனித எலும்புக்கூட்டில் 206 எலும்புகள் உள்ளன. அச்செலும்புக் கூட்டைப் போல தூக்கவெலும்புக் கூட்டு எலும்புகள் ஒன்றாக பிணைக்கப்படவில்லை; இதனால் இந்த எலும்புகளை நகர்வுகளுக்கு கையாள்வது எளிதாக உள்ளது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Vizniak, N.A., 2008, Quick Reference Clinical Consultant Muscle Manual, Professional Health Systems Inc, Canada
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கவெலும்புக்கூடு&oldid=2650058" இலிருந்து மீள்விக்கப்பட்டது