தொடையெலும்பு
Jump to navigation
Jump to search
எலும்பு: தொடை எலும்பு (Femur) | |
---|---|
Anterior view of the femur | |
Gray's | subject #59 242 |
Origins | Gastrocnemius , Vastus lateralis, Vastus medialis, Vastus intermedius |
Insertions | tensor fasciae latae, gluteus medius, gluteus minimus, Gluteus maximus, Iliopsoas |
Articulations | hip: acetabulum of pelvis superiorly knee: with the tibia and patella inferiorly |
MeSH | Femur |
தொடையெலும்பு (Femur) என்பது உடலுக்கு அருகாமையில் இடுப்பெலும்புடன் இணைத்து கொண்டிருக்கும் மேற்கால் எலும்பு. நடு உடலுடன், இடுப்பெலும்புடன், தொட்டுக்கொண்டிருப்பதால் மேற்கால் பகுதிக்குத் தொடை என்று பெயர்.
தொடையெலும்பு மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் குறுக்கு வெட்டு விட்டம் சராசரியாக 2.34 செமீ (0.92 in) இருக்கும். மாந்தரின் தொடை எலும்பு முழுவளர்ச்சி அடைந்த ஓராளின் எடையைப் போல 30 மடங்கு எடையைத் தாங்கும் மிகு வலுவுடையது[1].
நடக்கவல்ல, குதிக்கூடிய, பாலூட்டிகள், பறவைகள் போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளிலும், பல்லி போன்ற ஊர்வன இனங்களிலும் தொடையெலும்பே உடலுக்கு மிக அருகாமையில் உள்ள (most proximal) கால் அமைப்புப் பகுதியாகும்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]
- ↑ "The longest human bone". பார்த்த நாள் 2009-01-23.