உள்ளடக்கத்துக்குச் செல்

இடுப்பெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடுப்பெலும்பு
Left hip-joint, opened by removing the floor of the acetabulum from within the pelvis.
Plan of ossification of the hip bone.
இலத்தீன் os coxae/os ilium
கிரேயின்

subject #57 231

இடுப்பெலும்பு என்பது ஒழுங்கற்ற உருவம் கொண்ட, பெரிய, தட்டையான அமைப்புடைய, இடுப்பு வளையத்தை உருவாக்கும் எலும்புகளில் மிக முக்கியமான எலும்பாகும். இடுப்பு வளையத்தில் பக்கத்திற்கொன்றாக இரு இடுப்பெலும்புகள் காணப்படும். இவை முள்ளந்தண்டு நிரலை, தொடையெலும்புடன் இணைக்கும். தொடையெலும்புடன் இணைவதற்கான முக்கியமான ஒரு மூட்டு அமைப்பைக் கொண்டிருக்கும்.

வடிவமைப்பு

[தொகு]

இடுப்பெலும்பானது ஆரம்பத்தில், பூப்படைவதற்கு முன்னர் புடைதாங்கி (ilium), நாரியம் (ischium), பூப்பென்பு (pubic bone) என்ற மூன்று எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கும். பின்னர் முதிர்ச்சியடைகையில் மூன்றும் இணைந்து ஒரு தனியெலும்பாக மாற்றமடையும். இரு பக்கங்களிலுமுள்ள இடுப்பெலும்புகள் இரண்டும் முன்புறமாக ஒரு கசியிழையத்துடன் ஒட்டிக் காணப்படும். இடுப்பெலும்பின் ஒட்டும்பகுதி பூப்பென்புப் பகுதியாக இருப்பதனால் இந்தக் கசியிழையம் பூப்பென்பொட்டு (Pubic symphysis) என அழைக்கப்படுகின்றது. இரு இடுப்பெலும்புகளும் பின் புறமாக திருவெலும்புடன் பக்கத்திற்கொன்றாக இணைந்திருப்பதனால், இந்த எலும்புகள் அனைத்தும் இணைந்து ஒரு முழுமையான வளையத்தை (Pelviv ring) உருவாக்கும். இதனால் இடுப்புப் பகுதியில் ஒரு வாயகன்ற, ஆழமற்ற கொள்கலன் (பாத்திரம்) வடிவில் இந்த இடுப்புப்பகுதி அமைந்திருக்கும். இங்கு ஏற்படும் குழி இடுப்புக்குழி எனப்படும்.

இடுப்பெலும்பின் வெளிப்புறமாக ஒரு கிண்ணக்குழி போன்ற அமைப்பு காணப்படும். இது தொடையெலும்பின் மூட்டு பொருந்துவதற்கான கிண்ணக்குழியாக இருக்கும். இதனால் இது இடுப்பெலும்பு கிண்ணக்குழி (Acetabulum) எனப்படும். மேலும் நாரியமும், பூப்பென்பும் தமது இரு முடிவுகளிலும் இணைவதனால், நடுவில் ஒரு துளையை உருவாக்கும். இந்தத் துளை நெருங்கற்குடையம் அல்லது இடுப்புக்குழி துளை (Obturator foramen) எனப்படும்.

மேலதிக படங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுப்பெலும்பு&oldid=2650061" இலிருந்து மீள்விக்கப்பட்டது