கீழ்க்கால் உள்ளெலும்பு
கீழ்க்கால் உள்ளெலும்பு | |
---|---|
![]() கீழ்க்கால் உள்ளெலும்பின் அமைவிடம் சிவப்பு வண்ணம் | |
![]() கீழ் காலின் குறுக்குவெட்டு தோற்றம் | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | முழங்கால் மூட்டு, கணுக்கால் மூட்டு, மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | (os) tibia |
MeSH | D013977 |
TA98 | A02.5.06.001 |
TA2 | 1397 |
FMA | 24476 |
Anatomical terms of bone |
கீழ்க்கால் உள்ளெலும்பு (ஆங்கிலம்:Tibia)காலில் உள்ள இரு எலும்புகளில் ஒன்று. இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது.[1]
அமைப்பு[தொகு]
கீழ்க்கால் எலும்புகளில் இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது. இது மேல் முனை, கீழ் முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.
குருதி ஊட்டம்[தொகு]
கீழ்க்கால் உள்ளெலும்பு தமக்கு தேவையான குருதி ஊட்டத்தை முன்புற கீழ்க்கால் உள்ளெலும்பு தமனி (ஆங்கிலம்:Anterior tibial artery) மூலம் பெறுகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Drake, Richard L.; Vogl, A. Wayne; Mitchell, Adam W. M. (2010). Gray´s Anatomy for Students (2nd ). பக். 558–560. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-443-06952-9.
- ↑ "Blood supply of the human tibia". J Bone Joint Surg Am 42-A: 625–36. 1960. பப்மெட்:13854090.