தும்பினை கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தும்பினை கான்
போர்சிசிய கான்
போர்சிசிய மங்கோலியக் கான்
ஆட்சிக்காலம்? – 1130 கி. பி.
முன்னையவர்பசின்கோர் தோக்சின்
பின்னையவர்காபூல் கான்
பிறப்புதும்பினை செச்சென்
?
மங்கோலியா
இறப்புஅண். 1130
மங்கோலியா
குழந்தைகளின்
பெயர்கள்
காபூல் கான்
காதுலி பருலாசு
மற்ற ஏழு பேர்
சகாப்த காலங்கள்
11 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகள்
மரபுபோர்சிசின்
தந்தைபசின்கோர் தோக்சின்
மதம்தெங்கிரி மதம்

தும்பினை கான் என்பவர் போர்சிசின் ஏகாதிபத்திய மங்கோலியப் பழங்குடியினத்தின் கான் ஆவார். இவரைத் தைமூரிய அரசமரபினர் துமனய் கான் என்றும் அழைக்கின்றனர். இவர் 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்தார். இவரது மகனும், இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான காபூல் கான் கமக் மங்கோலியக் கூட்டமைப்பை இவரது இறப்பிற்குப் பிறகு தோற்றுவித்தார் . இவரது இரண்டாம் மகன் காதுலி தன் அண்ணன் காபூலுடன் ஒப்புக் கொண்டு வாழ்ந்தார்.[1] காபூல் கான் வழியில் தும்பினை கானின் நான்கம் தலைமுறை வழித்தோன்றலாக மங்கோலியப் பேரரசைத்[2] தோற்றுவித்த செங்கிஸ் கானும், காதுலி பருலாசின் வழியில் தும்பினை கானின் ஒன்பதாம் தலைமுறை வழித்தோன்றலாக தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்த தைமூரும் திகழ்கின்றனர். தும்பினை கான் கய்டு கானின் பேரன் ஆவார்.[3]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பினை_கான்&oldid=3574399" இருந்து மீள்விக்கப்பட்டது