துடுப்பு வாயன்
Jump to navigation
Jump to search
துடுப்புவாயன் Spoonbills | |
---|---|
![]() | |
Royal spoonbill | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவைகள் |
வரிசை: | Ciconiiformes |
குடும்பம்: | Threskiornithidae |
துணைக்குடும்பம்: | Plateinae |
துடுப்பு வாயன் (spoonbill) [1] என்பது நீண்ட கால்களையும் துடுப்பு போன்ற தட்டையான அலகையும் கொண்ட பெரிய பறவை. இவை நீரில் உள்ள பூச்சிகள், சிறு மீன்கள் போன்றவற்றை இரையாகக் கொள்கின்றன. இப்பறவைகள் நன்னீர், உவர்நீர் இரண்டிலுமே வாழ்வினும் நன்னீர் நிலைகளை விரும்புகின்றன. இப்பறவைகளில் மரங்களில் கூடுகட்டி வாழ்கின்றன.
பெண் பறவைகள் மூன்று முட்டைகள் வரை இடும். ஆண், பெண் இரண்டுமே அடை காக்கும். குஞ்சுகள் பிறந்தவுடன் சில நாட்கள் பார்க்கும் திறனற்று இருக்கும். தாய், தந்தை இரண்டுமே குஞ்சுகளுக்கு இரை ஊட்டும். குஞ்சுகளின் அலகு இளமையில் கூர்மையாகவே இருக்கும். அவை வளர்ந்து பருவமடையும் போது அலகு துடுப்பு வடிவம் பெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004